நரபலி: ஊனத்தால் தப்பிய சிறுவன்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த 13 வயது சிறுவனை நரபலிக்கும்பல் ஒன்று கடத்தியது. அந்த சிறுவன் ஊனமுற்றவனாக இருந்ததால்நரபலியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளான்.
பொன்னேரி கிருஷ்ணசாமி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப். 13 வயதானபிரதீப், 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச்சென்றான் பிரதீப். மாலையில் வீடு திரும்பவில்லை.இதையடுத்து அவனது பெற்றோர் பள்ளியிலும், அக்கம் பக்கத்திலும், கூட படிக்கும்மாணவர்களிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் பிரதீப் குறித்த தகவல்கிடைக்கவில்லை. அவனது பெற்றோர் பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில் பிரதீப்இரவில் தட்டுத் தடுமாறிய நிலையில் வீடு திரும்பினான்.
பிரதீப்பிடம் என்ன நடந்தது என்று தந்தை கருணா விசாரித்தார். அப்போது, தான்கடத்தப்பட்டதாக பிரதீப் தெரிவித்தான். காலையில், தம்புச் செட்டி தெரு வழியாகநான் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு முதியவர் வந்துஎன்னிடம் 20 ரூபாய் பணத்தை கொடுத்து கருப்பு நிறக் காரில் இருந்தவரிடம்கொடுக்கச் சொன்னார்.
நான் பணத்தைக் கொடுக்கப் போனபோது, காரில் இருந்த ஒருவர் எனக்கு சாக்லேட்கொடுத்தார். நான் வேண்டாம் என்றேன். உடனே அவர் எனது வாயைப் பொத்திகாருக்குள் ஏற்றினார். பின்னர் கார்தச்சூர் கூட்டு சாலையை நோக்கி வேகமாக கார்பறந்தது.
நான் சத்தம் போட்டு அழுதேன். இதையடுத்து ஒருவர் எனது காலில் கத்தியால் குத்திக்கிழித்தார். பின்னர் டிரைவர் இருக்கையின் கீழ் வைக்கோலால் செய்யப்பட்டிருந்த ஒருபொம்மையிலிருந்து ஒரு கருப்புக் கயிறை எடுத்து அதில் மையைத் தடவினார்.பின்னர் அதை எனது வலது கையில் கட்டினர்.
அதன் பின்னர் எனக்கு பயத்தால் பேச்சு வரவில்லை. அப்போது தான் எனதுஊனமான கையை அவர்கள் பார்த்தனர். இதையடுத்து பெரியபாளையம் தாண்டியபின்னர் ஒரு காலி மைதானத்திற்கு அருகே காரை நிறுத்தி என்னை கீழே தள்ளி விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பின்னர் 22 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வீடு சேர்ந்தேன் என்று கூறினான்சிறுவன் பிரதீப். இதையடுத்து பொன்னேரி போலீஸில் புகார் கொடுத்தார் கருணா.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த முதியவரையும், காரில் இருந்த கும்பலையும்வலை வீசி தேடி வருகின்றனர். அந்த முதியவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீஸார் கருதுகிறார்கள். சிறுவனை கடத்திய கும்பல் ஆந்திராவைச்சேர்ந்த மந்திரவாத கும்பலாக இருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications