சென்னையில் டெல் கம்ப்யூட்டர் தயாரிப்பு ஆலை
சென்னை:
பிரபல அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனமான டெல், சென்னை அருகேஸ்ரீபெரும்புதூரில் கம்ப்யூட்டர் தயாரிப்பு ஆலையை நிறுவ உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.50 ஏக்கர் பரப்பளவில் ரூ. 280 கோடி முதலீட்டில் புதிய கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாக உற்பத்திப் பிரிவை நிர்மாணிக்கவுள்ளது டெல்.
இதற்கான ஒப்பந்தம் இன்று கருணாநிதி மன்னிலையில் கையெழுத்தானது.
தமிழக அரசின் சார்பில்தொழில்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் மற்றும் டெல்நிறுவனம் சார்பில் அதன் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன்ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறனும் உடனிருந்தார்.
அடுத்த ஆண்டு மத்தியில் தனது உற்பத்தியை டெல் தொடங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் 1,100 பேருக்கு நேரடியாகவும், 4,000பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தயாநிதி மாறன்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications