ரூ2 கோடி பரிசு: சிபிஐ நீதிமன்றத்தில் ஜெ ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 2 கோடி பரிசுப் பணம் வந்தது தொடர்பாக ஜெயலலிதா மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் இன்று சிபிஐநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானார்.

இனிமேல் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராகத்தேவையில்லை என நீதிபதி உத்தரவிட்டார்.

1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளையொட்டி அவருக்கு 89 டிமாண்ட்டிராப்டுகள் வந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி.

இது தனது பிறந்த நாளுக்கு வந்த பரிசு என ஜெயலலிதா கூறினார். முதல்வராக இருக்கும்போது வரும்பரிசுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை. பணமாக வந்தால் அதை அரசு கஜானாவில்செலுத்த வேண்டும்.

ஆனால், அந்த விதியை மீறி ரூ. 2 கோடி மதிப்புள்ள 89 டி.டிக்களையும் தனது பெயரில் டெபாசிட் செய்துகொண்டார் ஜெயலலிதா. இதையடுத்து ஜெயலலிதா மீது சிபிஐயிடம் வருமான வரித்துறைபுகார் கொடுத்து, இது தொடர்பாக விசாரிக்கக் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, டிடிக்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு பணம் கிடைக்கஏற்பாடு செய்தவர்கள் என்ற வகையில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப் போட்டது.

ஜெயலலிதா தரப்பில் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைநீண்ட காலமாக நடந்து வருகிறது.

இந் நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதை பரிசீலித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம்,செப்டம்பர் 14ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதா,செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை ஜெயலலிதா, கே.ஏ. செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசுஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஏகப்பட்ட தொண்டர்கள், அதிமுகவக்கீல்கள் புடை சூழ ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் சசிகலாவும்வந்திருந்தார்.

நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு 3 பேரும் ஆஜராகினர். அப்போது ஜெயலலிதாதரப்பில் வழக்கறிஞர் ஜோதி 2 மனுக்களை தாக்கல் செய்தார். அதில், எதிர்வரும்விசாரணைகளின்போது நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் மற்றும்வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.

நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சிபிஐவழக்கறிஞர் ஜேக்கப் டேணியல் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்துஅடுத்து வரும் வாய்தாக்களின்போது ஜெயலலிதா நேரில் ஆஜராகத் தேவையில்லைஎன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதையொட்டி அங்கு அதிமுகவினர் பெரும் திரளாககூடியிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டடிருந்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் கூட்டத்தைஒழுங்குபடுத்தி ஜெயலலிதா கோர்ட்டுக்குள் செல்ல வழி ஏற்படுத்தி உதவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+