முண்டா ராஜினாமா: பாஜக ஆட்சி கவிழ்ந்தது
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில பாஜக முதல்வர் அர்ஜூன் முண்டா இன்று தனது பதவியைராஜினாமா செய்தார். சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றுகூறி வந்த முண்டா, தனக்கு தோல்வி உறுதி என்று தெரியவந்ததால் பதவியைராஜினாமா செய்தார்.
சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பே தனது அரசு பதவி விலக முடிவுசெய்திருப்பதாக முண்டா அறிவித்தார். இதன் மூலம் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசுகவிழ்ந்தது.இதையடுத்து, பாஜக ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த சுயேச்சை எம்எல்ஏமது கோடா தலைமையில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-லாலுவின் கட்சிஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கின்றன. மது கோடாமுதல்வராகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவோடு பாஜக தலைமையிலான கூட்டணிஅரசு ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், கடந்த 5ம் தேதி முண்டாஅமைச்சரவையில்இருந்த நான்கு அமைச்சர்களான (நால்வரும் சுயேச்சைகள்) மது கோடா,ஹரிநாராயணன் ரய், கமலேஷ் சிங், அனோஸ் எக்கா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அரசுக்கு வழங்கி வந்த ஆதரவையும் அவர்கள் திரும்பப் பெற்றனர். மேலும் ஒருதேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவும் ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் முண்டாஅரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.
ராஜினாமா செய்த நான்கு சுயேச்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கூட்டணிக்குஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 43 ஆகஉயர்ந்தது. அதே சமயம், முண்டா அரசின் பலம் 39 (சபாநாயகரையும் சேர்த்து) ஆககுறைந்தது.
இதையடுத்து ஆட்சியை தக்க வைக்க பாஜக தரப்பு நடவடிக்கையில் இறங்கியது.முதல் நடவடிக்கையாக 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களை பதவி நீக்க பாஜக முடிவுசெய்தது. இதையடுத்து 3 பேருக்கும் சபாநாயகர் நாம்தாரி மூலமாக நோட்டீஸ்அனுப்பியது.
அதற்கு 3 பேரும் பதில் அளித்துள்ள நிலையில் பதவி நீக்கம் மீதான தீர்ப்பைசபாநாயகர் ஒத்தி வைத்துவிட்டார்.
அவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டால் சபாநாயகரின் ஓட்டையும் வைத்து அரசைகாப்பாற்றி விடலாம் என பாஜக திட்டம் போட்டது.
ஆனால், இத் திட்டத்துக்கு சபாநாயகர் ஒப்புக் கொள்ளவில்லை. பதவி நீக்கம்தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டதால் சட்டசபையில்பாஜக-ஐக்கிய ஜனதா தள அரசு சிறுபான்மை அரசானது.
இதனால் 3 பேரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியும் என்ற நிலை உருவானது. இதனால் முண்டா அரசுக்குஆபத்து அதிகரித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று சட்டசபை கூடியது. அர்ஜூன் முண்டாபெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தந்த காலக்கெடு இன்றுடன் முடியும்நிலையில், நான் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்து வெல்வேன் என்று நேற்றுவரை கூறி வந்தார் முண்டா.
ஆனால், இன்று அவை கூடியதும் நான் ராஜினாமா செய்கிறேன் என்றுஅறிவித்துவிட்டு வெளியேறினார்.
முன்னதாக தனது எம்எல்ஏக்களையும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களையும் தங்களுக்குஆதரவு தந்துள்ள சுயேச்சைகளையும் காங்கிரஸ் கட்சி கேரளா உள்ளிட்ட இடங்களில்ரிசாட்டில் பாதுகாத்து வைத்திருந்தது.
இன்று சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்க இருந்ததால் அனைவரும் தனி விமானம்மூலம் நேற்று இரவு ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்குஅழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 37 எம்.எல்.ஏக்கள் அப்போதுஆஜர்படுத்தப்பட்டனர். மீதமுள்ள 6 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை தீர்மானத்தின் மீதானஓட்டெடுப்பில் கலந்துகொண்டு முண்டா அரசை வீட்டுக்கு அனுப்புவார்கள் என லாலுபிரசாத் அறிவித்திருந்தார்.
மறுபக்கம் பாஜக அரசைக் காக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கடைசி நேரமுயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு வரை இது தொடர்பாகராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்தன. ஆனால்,தற்போதைய சூழ்நிலையில் முண்டா அரசு கவிழ்வது தவிர்க்க முடியாதது என்றமுடிவுக்கு பாஜக வந்துவிட்டது.
இதையடுத்து இன்று காலை ஓட்டெடுப்பையே சந்திக்காமல் பதவி விலகிவிட்டார்முண்டா.
ஜார்க்கண்ட் சட்டசபையின் பலம்:
மொத்த இடங்கள்: 81
காங். கூட்டணி: 43
பாஜக கூட்டணி: 38
பெரும்பான்மை பலத்துக்கு தேவையான எண்ணிக்கை: 41












Click it and Unblock the Notifications