இலங்கை தமிழ் எம்பிக்களை சந்திக்கும் மன்மோகன்
டெல்லி:
இலங்கை தமிழ் எம்பிக்கள் வரும் 17ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளனர்.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தமிழர் பிரதிநிதிகள் யாரையும்இந்திய அரசு சந்திக்காமல் இருந்து வருகிறது. அதேசமயம், இலங்கை அரசுத் தரப்பிலிருந்து பலரும் பிரதமர்உள்ளிட்டோரை சந்தித்துள்ளனர்.இலங்கை அரசுப் பிரதிநிதிகளை சந்திப்பது போல தமிழர் பிரதிநிதிகளையும் மத்திய அரசு சந்திக்க வேண்டும்என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதுதொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
அப்போது முறையாக நேரம் கேட்டு அனுமதி கோரினால் நிச்சயம் சந்திக்கிறேன் என்று உறுதியளித்தார்மன்மோகன் சிங். இந் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் நான்கு பேர் கொண்ட குழு சமீபத்தில்சென்னை வந்து வைகோவை சந்தித்துப் பேசியது.
பிரதமர் மற்றும் முதல்வரை சந்திக்கவும் அவர்கள் விரும்பினர். ஆனால் பிரதமர் வெளிநாட்டு பயணம்மேற்கொண்டிருந்ததால் பிரமதரை சந்திக்க முடியவில்லை. முதல்வர் கருணாநிதியும் வேறு அலுவல்களில்இருந்ததால் அவரையும் சந்திக்க முடியவில்லை.
இந் நிலையில், இலங்கை தமிழ் எம்.பிக்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்அலுவலகத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு தலைவருக்கு கடிதம் வந்துள்ளது. அதில்,வருகிற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்னை எனது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திக்கலாம் என பிரதமர்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழ் எம்.பிக்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவுள்ளனர். சமீபத்தில் சென்னைக்கு வந்தஎம்.பிக்கள் சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், சேனாதி ராஜா, கஜேந்திரகுமார் ஆகியோர் தொடர்ந்துசென்னையிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பார்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சந்தித்த பின்னர் சென்னை திரும்பி முதல்வர் கருணாநிதியையும் சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications