40வது சதத்தை அடித்த சச்சின் டெண்டுல்கர்
கோலாலம்பூர்:
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்த ஒருநாள்கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 141 ரன்களை குவித்தார். இது அவருக்கு40வது ஒருநாள் சதமாகும். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள்எடுத்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்புஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில்ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது.இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டிநடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கவீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ரசிகர்களுக்கு பெரும்எதிர்பார்ப்பு நிலவியது. அதை பொய்யாக்காத விதத்தில் ஆரம்பத்திலிருந்தேஅதிரடியாக ஆட ஆரம்பித்தார் சச்சின்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த சச்சின் நீண்டநாட்களுக்குப் பிறகு தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாகஆடி வந்த சச்சின் தனது சதத்தை எடுத்தார்..
![]() |
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்துவந்த சச்சினுக்கு இந்த சதம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. அத்தோடு தனதுஆட்டத் திறன் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
சதம் அடித்த தெம்போடு தொடர்ந்துஅதிரடியாக ஆடிய சச்சின் இறுதி வரைஆட்டமிழக்காமல் 141 ரன்களை விளாசித் தள்ளினார்.148 பந்துகளில் இந்த ரன்களைஅவர் எடுத்தார். இதில் 13 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.
சச்சினுக்கு இது 40வது ஒரு நாள் சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் 16,500 ரன்களைசச்சின் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 35 சதங்கள் எடுத்துள்ளார்.
சச்சினுக்கு அடுத்தபடியாக இர்பான் பதான் சிறப்பாக ஆடி 64ரன்களை எடுத்தார்.கேப்டன் டிராவிட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். துணை கேப்டன் வீரேந்திர ஷேவாக்வழக்கம் போல சொதப்பினார். 10 பந்துகளை சந்தித்த அவர் 9 ரன்களை மட்டுமேசேர்த்தார்.
பட்டாசாக வெடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டோனி 2 ரன்களில் பெவிலியனுக்குத்திரும்பினார். சுரேஷ் ரெய்னா 34 ரன்களை எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில்இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடத் தொடங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications