இந்தி: பெங்களூர் வானொலி நிலையம் சூறை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூர் வானொலி நிறுவனம் ஒலி பரப்பி வரும் இந்தி நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ரக்ஷனாவேதிகே என்ற கன்னட அமைப்பு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி வானொலி நிலையம்சூறையாடப்பட்டது.

பெங்களூர் ஆளுநர் மாளிகை உள்ள சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. நேற்று மாலைஇங்கு கன்னடா ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாதே, இந்திக்கு பிரசாரம் செய்யாதே என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது சிலர் வானொலி நிலையத்திற்குள் நுழைந்தனர். எப்.எம். வானொலி நிலைய அலுவலகத்திற்குள்புகுந்த அவர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், ஒலிபரப்பு சாதனங்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும்ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+