முன் ஜாமீன் கோரும் காளிமுத்து-மருத்துவமனையில்
சென்னை - மதுரை:
தன் மீது போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து முன் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மாஜி சபாநாயகர்காளிமுத்து.
சென்னை அரசினர் தோட்டம் சட்டசபை உறுப்பினர் விடுதி வளாகத்தில் உள்ள 2ஹோட்டல்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ததில் அரசுக்கு பல லட்சம் அளவுக்குஇழப்பீடு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக காளிமுத்து, காண்டிராக்டர்கள்கே.வி.ஆர்.மணி, ஹனீபா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காளிமுத்து இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
முன்னதாக காளிமுத்துவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
மதுரை வந்த காளிமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அண்ணா நகரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்திருப்பது தெரிய வந்தது.இதனால் தான் உடல் நடுக்கம், தலைசுற்றல் ஆகியவை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளத காளிமுத்து தன் மீதான வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
எத்தனை வழக்குகளை இந்த அரசு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார். அரசியல் பழிவாங்கும் நோக்கில்இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இதை கண்டு நான் பயப்படப் போவதில்லை. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை புரட்சித் தலைவியின்விசுவாசியாக தொடர்ந்து செயல்படுவேன். என்னை ஆசை தீர பழி வாங்க வேண்டும் என முதல்வர் கருணாநதிதுடிக்கிறார். அதை நான் தடுக்கப் போவதில்லை.
எனக்கும், புரட்சித்தலைவிக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தவும் அவர் முயலுகிறார். ஆனால் அதுநடக்காது. அவரது எத்தகைய நடவடிக்கையையும் சந்திக்க நான் தயார் என்றார் காளிமுத்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications