அதிமுகவிலிருந்து மேலும் பாராட்டு வரும்: கருணாநிதி சூசகம்!
சென்னை:
திமுக நல்லாட்சி நடத்துகிறது என்று சொன்னதற்காக ஒரு அதிமுக எம்.எல்.ஏவை நீக்கியுள்ளனர். ஆனால்அவரைப் போல மேலும் பலரும் நல்லாட்சி என சொல்லவுள்ளனர், அவர்களும் திமுகவுக்கு வருவார்கள் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது கருணாநிதி பேசுகையில்,அதிமுகவிலிருந்து மேலும் பல முக்கிய தலைகள் திமுகவுக்கு ஆதரவு தரும் என்று சூசகமாக தெரிவித்தார்.கருணாநிதி பேசுகையில், திமுக நல்ல ஆட்சி என்று சொன்னதற்காக அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரைநீக்கியுள்ளனர். பலரும் இதுபோல சொல்லவுள்ளனர். அவர்களும் திமுகவுக்கு வரும் காலம் வெகு தொலைவில்இல்லை.
சிலர் தலைவர்கள் ஆவதற்காக கட்சி நடத்துகிறார்கள். யாரையும் தலைவர் ஆக்குவதற்காக திமுகதொடங்கப்படவில்லை. நாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தை பதவி மூலம் எப்படி நிறைவேற்றலாம் என்று தான்சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கவர்ச்சியால் கடந்த காலத்தில் தமிழகம் பாழ்பட்டுப் போய்க் கிடந்தது. இனி மேலும் ஏழை, எளிய மக்களைகவர்ச்சியால் மயக்குவது என்பது ஆபத்தானது.
தமிழக அரசியலில் சந்தர்ப்பவாதிகள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நாம்அனைவரும் தமிழ் ஜாதியினர். ஒரே இனம். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் வழியில்அனைவரையும் நாங்கள் சமமாக பாவிக்கிறோம்.
இடைப்பட்ட காலத்தில் காலத்தாலும், கவர்ச்சியாலும் நாம் பிரிந்திருந்தோம். கனவு, பண்பு, தமிழ் உணர்வு, நட்பு,இனம், மொழிக்காக என்றென்றும் நாம் கடமைப்பட்டவர்கள். அதை வளர்க்க பாடுபடுவோம் என்றார்கருணாநிதி.
கருணாநிதியின் பேச்சு, அதிமுகவினருக்கு விடப்பட்ட அழைப்பாகவே இருந்தது. மேலும், நல்லாட்சி என்றுதிமுக ஆட்சியை பாராட்ட மேலும் பலர் காத்துள்ளனர் என்று அவர் கூறியிருப்பது, அதிமுகவிலிருந்து மேலும்பலர் திமுகவுக்கு தாவப் போகிறார்கள் எனபதை சூசகமாக தெரிவித்துள்ளாதாகவே கருதப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications