ஜெ கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: சண்முகம்
மதுரை:
என்னை அதிமுகவை விட்டு நீக்கினால் சட்டசபையில் சுயேச்சையாக செயல்படுவேன். திமுக அரசின்செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு கொடுப்பேன் என அதிமுக எம்எல்ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ எஸ்வி.சண்முகம்மேடையில் ஸ்டாலினை ஏகத்துக்கும் பாராட்டியதோடு, அவரைப் பார்த்து திராவிட கட்சிகளை இணைக்கும்தளபதியாக செயல்படுங்கள் என்றார்.இதையடுத்து அவரிடம் இருந்த கட்சிப் பதவியான ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பதவியைபறித்தார் ஜெயலலிதா. அதே நேரத்தில் அவரை கட்சியை விட்டு நீக்கினால் எம்எல்ஏ பதவியோடு திமுகவுக்குஓடிவிட சண்முகத்தால் முடியும்.
இதையத்து அவரை பதவி விலகக் கோரி மதுரையில் அதிமுகவினர் செருப்பு, விளக்குமாறுகளுடன்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் சண்முகம் கூறுகையில்,
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா மதுரை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையம் சென்றேன். அங்கேஎன்னிடம் அவர் சால்வையை பெற்றுக் கொள்ளவில்லை. பின்னர் கோரிப்பாளையத்தில் ஏராளமானதொண்டர்களுடன் நின்று வரவேற்றேன். அப்போதும் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை.
மாலையில் ஆண்டிப்பட்டி செல்லும் வழியிலாவது பார்ப்பார் என்று நினைத்து 5 குழந்தைகளுக்கு பெயர்வைப்பதற்காக நடுரோட்டில் காத்து நின்றோம். அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது. ஜெயலலிதா என்னைஅவமானப்படுத்திவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களே பேசியது எனக்கு பெரிய உறுத்தலாக இருந்ததது.இதனால் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். ஒரு எம்எல்ஏயிட்ம் சால்வை வாங்குவதற்கு கூடஜெயலலிதாவுக்கு நேரம் இல்லை.
திராவிட இயக்கங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதில் ஆசையாக இருக்கிறேன். ஸ்டாலின்அரசியலில் பக்குவப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக செய்ய முடியாத ஒரு திட்டத்தை எனது தொகுதிமக்களுக்கு அவர் செய்து கொடுத்துள்ளார். எனவே அவரை பாராட்டாமல் இருக்க என்னால் முடியவில்லை.
எனக்கு எதிராக செருப்பைக் காட்டுவது, துடைப்பத்தை காட்டிப் போராட்டம்நடத்துவதெல்லாம் அதிமுக கலாச்சாராம். இப்படிச் செய்தால்தான் ஜெயலலிதாவிடம்பேர் வாங்க முடியும் என்று சிலர் செய்கிறார்கள். காக்கா பிடிப்பவர்களும், ஜால்ராதட்டுகிறவர்களும் தான் அதிமுகவில் இருக்க முடியும்.
நான் பதவி விலக வேண்டும் என்று எம்பி கோகுல இந்திரா பேசியிருக்கிறார். அவர் கட்சிக்காக என்ன மாதிரிபாடுபட்டார் என்பது என்று எனக்கு தெரியும். எனவே அவர் அதிகமாக பேசக் கூடாது.
மதுரை மேற்கு தொகுதிக்குள் என்னை நுழைய விட மாட்டோம் என அதிமுகவின்ர் கூறி வருகிறார்கள். அவர்கள்என்னை எப்படி தடுக்க முடியும். என்னை சுற்றி ஏ.கே-47னுடன் ஆட்கள் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைகெடுக்க முயன்றால் சுட்டு விடுவார்கள்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு என்னை அழைக்காதது வருத்தம் தரவில்லை. ஆனால், அதை பெருத்தஅவமானமாக கருதுகிறேன். ஒரு கட்சியின் செயற்குழுவுக்கு எம்எல்ஏக்களை அழைக்காமல் இருப்பதுஅதிமுகவில் மட்டும்தான் நடக்கும்.
அதிமுக கலாச்சாரம் எனக்குப் பிடிக்கவில்லை. காலில் விழ வைப்பது, நீண்ட நேரம் காக்கவைப்பது என எவ்வளவு கேவலங்கள் அந்தக் கட்சியில்.
இதுவரை நான் அதிமுகவில் தான் நீடிக்கிறேன். ஒரு வேளை என்னை கட்சியிலிருந்து நீக்கினால் சட்டசபையில்சுயேச்சசையாக செயல்படுவேன். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு கொடுப்பேன். அதன் மூலம்என் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டுவேன்.
எனது கருத்துக்கு உண்மையில் அதிமுகவிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. நிறையஎம்.எல்.ஏக்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அத்தனை பேரும்மனப் புழுக்கத்தில் உள்ளனர். ஆனால் யாரும் வெளிப்படையாக சொல்லும் மனநிலையில் இல்லை.
பூனைக்கு நான் மணி கட்டியுள்ளேன். மணியோசை தொடரும். இப்போது அதிமுகஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்றார் சண்முகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications