துணைவேந்தர் இல்ல வெடி விபத்து-சந்தேகங்கள்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்,வெடிகுண்டு வெடித்தாக கூறப்படுவதை சென்னை காவல்துறை நம்ப மறுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தருக்கான இல்லம் உள்ளது.இங்குதான் துணைவேந்தர் விஸ்வநாதன் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார்.இந்த வீட்டில், சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தனது வீட்டில் வெடிகுண்டுவீசப்பட்டதாகவும், தன்னைக் கொல்ல நடந்த முயற்சியே இது என்றும் விஸ்வநாதன்புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நலையத்திலும் அவர் புகார்கொடுத்துள்ளார்.
ஆனால் போலீஸார் வெடிகுண்டு தாக்குதல் என்ற புகாரை நம்ப மறுக்கிறார்கள்.சம்பவம் நடந்த சமையல் அறையில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயம் ஏதும்சிக்கவில்லை என்று போலீஸ் கூறுகிறது.
ஆனால் துணைவேந்தர் விஸ்வநாதன், தன்னைக் கொல்ல நடந்த முயற்சிதான் இது.வெடிகுண்டுதான் வைக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக கூறி வருகிறாராம்.
இந்த சர்ச்சை தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில்,
துணைவேந்தர் வீட்டு சமையலறையை காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டுஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில், மின் கசிவு அல்லது காஸ் சிலிண்டர் வெடிப்புகாரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.
வெடிகுண்டு எதுவும் அங்கு வெடிக்கவில்லை. இருந்தாலும் தடயவியல்சோதனையின் முடிவு வந்த பிறகே எதையும் உறுதிப்படுத்த முடியும். துணைவேந்தர்பாதுகாப்பு கோரினால் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக துணைவேந்தர் விஸ்வநாதன்,பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த விதம், அவர்களை அழைத்துச் சென்று சம்பவம்நடந்த இடத்தை காட்டியது போலீஸாரை அப்செட் செய்துள்ளதாம்.
தனக்கு எதிராக சதி நடக்கிறது, வெளியார்தான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்என்று கூறும் துணைவேந்தர் அப்படி யார் மீது சந்தேகப்படுகிறார் என்பதைபோலீஸாரிடம்தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில்புலம்புகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications