திமுக-அதிமுகவின் ஹை ஜம்ப் அரசியல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அதிமுக எம்எல்ஏ சண்முகம் ஹை ஜம்ப் செய்து திமுக பக்கமாக தாவியதைத் தொடர்ந்து, திமுகவில்அதிருப்தியில் உள்ள புள்ளிகளை இழுக்கும் வேலையில் அதிமுக ஈடுபட்டுள்ளது.அதற்கு முதல் வெற்றியும் கிடைத்துள்ளது.

சேடப்பட்டி ஒன்றிய திமுக செயலாளரான பாண்டியராஜன் அதிமுகவுக்குதாவியுள்ளார். அதிமுக எம்பி தினகரன் முன்னிலையில் அவர் அதிமுகவில்இணைந்தார்.

அவருடன் திமுக, ஒன்றிய பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, அன்பழகன், ராமர்,கார்த்திகேயன், கிளை செயலாளர் காசியப்பன் ஆகியோரும் அதிமுகவில்இணைந்தனர்.

இவர்களை அதிமுகவுக்கு இழுத்தது மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன்செல்லப்பாவாம்.

அதிமுகவுக்குத் தாவிய பாண்டியராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் சிறு வயதில் இருந்தே திமுகவில் இருந்து வருகிறேன். பஞ்சாயத்து தலைவர்,கிளைச் செயலாளர் என இருந்து கடந்த, 6 ஆண்டுகளாக ஒன்றிய செயலாளராகஇருந்து வருகிறேன்.

திமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. நிதி வசூலுக்கு தான்எங்களை போன்ற நிர்வாகிகளை பயன்படுத்தி கொள்கிறது திமுக தலைமை.

ஆட்சிக்கு வந்த பிறகும் எங்களை கண்டுகொள்வதில்லை. மக்கள் நலனை கருத்தில்கொள்ளாமல் சொந்த மகன்களின் நலனை கருத்தில் கொண்டு கருணாநிதிசெயல்படுகிறார்.

ஆனால் ஜெயலலிதா தொண்டர்களை அரவணைத்து செல்கிறார். எனவே அவரதுதலைமையை ஏற்று அதிமுகவில் இணைகிறோம் என்றார்.

கருணாநிதியை வாழ்த்திய அதிமுக கவுன்சிலர்:

இதற்கிடையே திருச்சி அருகே உள்ள துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுககவுன்சிலர் ஒருவர் கருணாநிதியை வாழும் கடவுள் என்று வர்ணித்ததால் அவருக்கும்பிற அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.

நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் முருகேசன்,

நகர்மன்ற சேர்மன் பதவியை தலித் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்த "வாழும் கடவுள்முதல்வர் ஐயா கருணாநிக்கு நன்றி என்றார்.

இதனால் அதிமுக கவுன்சிலர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. முருகேசனை எதிர்த்துஅவர்கள் கத்த, பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+