கரீஷ்மா தான் என்னை கடத்தினர்-குழப்பும் ஜமுனா
சென்னை:
தன்னை கார்த்திகேசுவும் அவரது மனைவி கரீஷ்மாவும் கடத்தியதாக 13 வயதுமாணவி ஜமுனா கூறியுள்ளார்.
![]() |
மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு தனது மனைவி கரீஷ்மாவுடன் சென்னைபுதுவண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். இந்த கரீஷ்மா மலேசியாவில்வேலைபார்க்க சென்றபோது விபச்சாரத்தில் தள்ளப்பட்டார். விபச்சார விடுதியில்இருந்து அவரை மீட்ட கார்த்திகேசு, அவரை திருமணம் செய்து கொண்டார்.
![]() |
பின்னர் கரீஷ்மாவை அவரே விபச்சாரத்தில் தள்ளினார். இதனால் அவரிடம் இருந்துகரீஷ்மா தப்பியோடி தமிழகம் வந்தார். ஆனால் கார்த்திகேசுவும் மலேசியாவில்இருந்து ஓடி வந்து கரீஷ்மாவுடன் சமாதானம் பேசினார். இதையடுத்து இருவரும்மீண்டும் ஒன்றாக சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந் நிலையில் தனது வீட்டின் உரிமையாளர் மகளான ஜமுனாவை (13) இழுத்துக்கொண்டு ஓடினார் கார்த்திகேசு.
15 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.போலீஸார் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்ததையடுத்து இருவரும்விஷம் அருந்தினர். இதையடுத்து போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தனர்.
உடல் நலம் தேறிவிட்ட கார்த்திகேசு கைது செய்யப்பட்டுள்ளார்.ஜமுனாவை கார்த்திகேசு கடத்துவதற்கு அவரது மனைவி கரிஷ்மாவும் உடந்தையாகஇருந்ததாக ஜமுனாவின் தயார் புகார் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் ஜமுனா போலீசாரிடம் கூறுகையில், எனது தாயார்தான் இந்தப்பிரச்சினைக்கெல்லாம் முதல் காரணம். கார்த்திகேசு எனது வீட்டுக்கு ஆரம்பத்தில்சாதாரணமாகத்தான் வந்து போய்க் கொண்டிருந்தார்.
ஆனால் எனது தாயார்தான் சந்தேகப்பட ஆரம்பித்து என்னைத் திட்ட ஆரம்பித்தார்.அவர் திட்டத் திட்ட எனக்குள் கார்த்திகேசு மீது காதல் பிறந்து விட்டது. மணந்தால்அவரைத்தான் மணப்பது என்ற முடிவுக்கே நான் வந்து விட்டேன்.
இப்போது அவருடன் நான் வாழ்ந்து விட்டேன். எங்களைப் பிரிக்கக் கூடாது.வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன் என்று கூறியிருந்தார்.
இப்போது உடல் நலம் தேறி உறவினரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜமுனாநிருபரிடம் பேசுகையில், கரீஷ்மா மீதும் கார்த்திகேசு மீதும் பழி சுமத்தியுள்ளார்.
அவர் கூறுகையில்,
15 நாட்களுக்கு முன் நான் வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கரீஷ்மாவும் கார்த்திகேசுவும் வழியில் நின்று மறித்தனர். என்அம்மா அழைத்து வரச் சொன்னதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது எனக்கு கரீஷ்மா குளிர்பானம் தந்தார். அதை குடித்த நான் மயங்கினேன்.அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடன் கார்த்திகேசு மட்டுமேஇருந்தார். என்னை இருவரும் திட்டமிட்டு கடத்தினர்.
என்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த கரீஷ்மா பலமுறை முயன்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. இந் நிலையில் தான் என்னை கடத்திவிட்டனர் என்று கூறியுள்ளார்.
ஜமுனா நாளுக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் தந்து வருவதால் போலீசார் தலைசுற்றிப் போய்உள்ளனர்.
ஆனாலும் 13 வயதே ஆன ஜமுனாவை கடத்தி ஊர் ஊராக சுற்றிய கார்த்திகேசு,அவருடன் தொடர்ந்து உடலுறவும் வைத்துள்ளது உறுதியானால் மைனர் பெண்ணைகற்பழித்த குற்றத்துக்காக அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார் என்றுதெரிகிறது.
இதற்கிடையே ஜமுனாவுக்கு சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications