ஜெ போராட்டம்-வைகோ, திருமா பங்கேற்பு
சென்னை:
சிக்குன் குனியா நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதை கண்டித்து இன்று மாலை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா போராட்டம் நடத்த இருக்கிறார். இதில் வைகோ, திருமா உள்ளிட்ட 13 கட்சிதலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் சிக்குன் குனியா நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். ஆனால், நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசுதவறி விட்டதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயலலிதா அழைப்புவிடுத்துள்ளார்.அதிமுகவுடன், மதிமுக, விடுதலை சிறுத்தலைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் இணைந்து போராட்டத்தைநடத்துகின்றன.
சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர்தாவூத்மியா கான், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, சமூக நீதி தலைவர் ஜெயவீரபாண்டியன்,மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர்மணிகண்டன்,
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், கிறிஸ்தவ மக்கள் கட்சி தலைவர் மதியநல்லு, அகில இந்தியகுடியரசு கட்சி தலைவர் தாமோதரன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, அகிலஇந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயாளர் இசக்கிமுத்து ஆகிய 13 கட்சி தலைவர்களும்தொண்டர்களுடன் பங்கேற்கின்றனர்.
மெமோரியல் ஹால் அருகே இந்தப் போராட்டம் நடக்கிறது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் மாவட்டதலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications