சு. சுவாமி என்ன நினைத்திருப்பார்?: கருணாநிதி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வரும் 20ம் தேதி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்த உள்ளதாக திமுகதலைவரும் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:மதுரை இடைத் தேர்தல் தொடர்பாகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் வரும் 20ம் தேதி கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சு நடத்த உள்ளேன். 21ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும். அதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் களமிறங்குவோம்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பெயரால் அமைக்கப்பட்ட சமத்துவபுர வாசிகளுக்குத் முதல் கட்டமாக கலர்டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கள்ளமில்லா உள்ளத்தினராய், ஏழை எளியோர் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பெற்றுச் சென்றதைகண்டபோது, வயிற்றெரிச்சல்காரர்களின் வசை மொழிகளுக்கு இடையே, அந்த ஏழை மக்களின் சிரிப்பைபார்த்தபோது, ஆகா, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அறிஞர் அண்ணா சொன்னதுஎவ்வளவு உண்மை என்று நினைத்து மகிழ்ந்தேன்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி கலர் டிவிக்கள் தரப்பட்டுள்ளதாக ஒருவர் முனகியுள்ளார். தேர்தல் வாக்குறியில்சொன்னபடி கொடுக்காமல் இருந்திருந்தால் திமுக வாக்குறுதி என்னவாயிற்று என்று வாய் கிழியபேசியிருப்பார்கள்.
இப்போது வாக்குறுதிகளை வரிசையாய் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டோம். இதனால் வெறும் வாயைமெல்லுகிறார்கள், பூகம்ப பெருமூச்சு விடுகிறார்கள்.
கேபிள் டிவியை அரசுடமையாக்கும் சட்டத்தை கொண்டு வர தயாரா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஎன்னைப் பார்த்துக் கேட்டுள்ளார். மாநில அரசு நிறைவேற்றக் கூடிய சட்டம் எது, மத்திய அரசு நிறைவேற்றக்கூடிய சட்டம் எது என்பது கூட தெரியாமல் இவ்வளவு நாள் முதலமைச்சராக இருந்திருக்கிறாரே என்பதற்காககொஞ்சும் சிரித்துத் தொலைப்போம்.
மதுரை அதிமுக எம்எல்ஏவை எதிர்த்து அக் கட்சியினர் விளக்குமாறுக ஏந்திச் சென்று போராட்டம்நடத்தியுள்ளனர். நண்பர் சுப்பிரமணியம் சுவாமி இதைப் பார்த்திருந்தால், பரவாயில் நமக்கு எதிராக நீதிமன்றமுகப்பில் அதிமுகவினர் நடத்திய போராட்டத்தை விட இது பண்பாடு மிக்கது என்று சொல்லியிருப்பார்.
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் தலைவி, அண்ணா பிறந்த நாளையொட்டி எங்கும் ஒரு மாலை கூடஅணிவிக்கவில்லை. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது.இப்போது 24 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது போலும். இதனால் அவருக்கு அண்ணா சிலைக்குமாலை போட நேரமில்லாமல் போயிருக்கிறது.
ஜெயலலிதாவிடம் இருந்து என்னை கருணாநிதியால் பிரிக்க முடியாது என்று காளிமுத்து கூறியிருக்கிறார்.அவரை யார் பிரிக்க முயன்றது?. அவரை ஜெயலலிதா பிரித்துவிடாமல் இருந்தாலே போதும்.
திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்தக் காரணமும் கிடைக்காததால் பாவம், சிக்குன் குனியாவைஎதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும்.
தன் பெயர் பத்திரிக்கைகளில் வர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு போராட்டத்தை நடத்துகிறார் ஜெயலலிதாஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications