கசப்பாக முடிந்த இனிய சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
![]() |
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த இனிய சந்திப்புஎன்ற நிகழ்ச்சி பெரும் கலாட்டாவில் முடிந்தது.
நாமக்கல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.இனிய சந்திப்பு என்று இதற்கு பெயரிட்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்திலஅதிமுகவினர் சிலர் பேசிய பேச்சு எதிர்தரப்பு கவுன்சிலர்களின் கோபத்தை கிளப்பிவிட்டது.
அமைதியாகப் போய்க் கொண்டிருந்த கூட்டம் அமளியை தொடங்கியது. இருதரப்பினரும் சரமாரியாக திட்டியபடி இருக்கைகளை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசிதாக்கிக் கொண்டனர்.
இதனால் கூட்டத்துக்கு வந்த பொது மக்கள் அரண்டு ஓடினர். இதையடுத்துஅதிமுகவினர் சாலை மறியலில் இறங்கினர். பின்னர் இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.ஒன்றியக் குழு தலைவர் கரிகாலன், அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி ஆகியோருக்குஇந்தக மோதலில் காயம் ஏற்பட்டது. அதேபோல கவுன்சிலர்கள் 3 பேரும்காயமடைந்தனர்.
இந்த மோதலால் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பதட்டம் நிலவியது. இதனால்அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.













Click it and Unblock the Notifications