நக்ஸல்களுடன் காட்டுக்குள் தப்பிய ரகு-சுதாராணி
சென்னை:
சென்னையில் ராக்கெட் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து நக்ஸலைட்டுகளுக்கு அனுப்பி வந்த ரகுவும்அவனது மனைவி சுதாராணியும் ஆந்திராவுக்கு தப்பியோடி நக்ஸல்கள் பாதுகாப்பில் காட்டுப் பகுதிக்குள்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
![]() |
ஆந்திர மாநிலத்துக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணைநடத்தியதில் சென்னை பாடியில் உள்ள எவரெஸ்ட என்ஜினீயரிங் கம்பெணி, கொரட்டூரில் உள்ள ஜெய்டெக்கம்பெனி, தனலட்சுமி பவுண்டரி கம்பெனி, யூனிவர்சல் கம்பெணி, பாரத் பைன் என்ஜினீயரிங் ஆகியநிறுவனங்கள் சிக்கின.
![]() |
இந்த நிறுவனங்களில் ராக்கெட் லாஞ்சருக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவாஜி, குமார், ரமேஷ், அருணாச்சலம், முத்துசாமி, அண்ணாமலை, வீரபத்தரராவ் ஆகிய 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்க இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் தந்து, அதை அவர்களிடம் இருந்து பெற்றுஆந்திராவுக்கு கடத்திய ரகு மற்றும் அவரது மனைவி சுதாராணியும் தலைமறைவாகிவிட்டனர்.
2003ம் ஆண்டு முதல் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் வசித்துவந்த ரகுவின் வீட்டை போலீசார் உடைத்து சோதனையிட்டபோது 3 லாஞ்சர்கள்சிக்கின.
சீனிவாச ரெட்டி என்ற பெயரில் சென்னையிலிருந்து ராக்கெட் குண்டுகள் மற்றும்லாஞ்சர்களை ஆந்திர நக்ஸல்களுக்கு இவன் அனுப்பி வந்துள்ளான்.ரகுவும் அவனது மனைவியும் ஆந்திராவுக்கு தப்பியோடிவிட்டது தெரியவந்துள்ளது.
டிப்ளமோ என்ஜினியரான ரகுவுக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியமொழிகள் நன்றாக பேசத் தெரியும்.
தப்பியோடிய ரகுவும் சுதாராணியும் ஆந்திரா மாநிலம் நல்லமலை வனப்பகுதியில்நக்சல்களுடன் ஊடுருவி விட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களைப் பிடிக்க ஆந்திர, தமிழக போலீசார் தனிப் படைகளை அமைத்துள்ளன.இருவரையும் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதாராணிக்கு நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications