படித்த குற்றத்திற்காக 12 நாட்கள் கற்பழிக்கப்பட்ட பாக். பெண்!
இஸ்லாமாபாத்:
மத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த குற்றத்திற்காகபாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள்அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் மாவட்டம் கபீர்வாலா என்ற நகருக்கு அருகே உள்ள சக்ஷெர் கான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். முன்னாள் ராணுவவீரரான இவரது மனைவி பெயர் மும்தாஜ் மய். இவர்களது மகள் கஜாலா ஷாஹீன்பதி.இவர்கள் மிராலி என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வகுப்பைச் சேர்ந்தபெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது என பழங்குடியின மத குருமார்கள்கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆனால் இதை மீறி ரகசியமாக படித்து வந்தார் கஜாலா. இந்த நிலையில் கடந்த 25ம்தேதி இவர் பஹாவுதீன் ஜஹாரியா பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பை முடித்தார்.
இது ஊர் மத குருமார்களுக்குத் தெரிய வந்தது. தங்களது கட்டுப்பாட்டை மீறி கஜாலாபட்ட மேற்படிப்பை படித்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.
கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதன் முடிவில் மும்தாஜ் மற்றும் கஜாலாவை 12நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து கற்பழிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இருவரும் தனி வீட்டில் அடைக்கப்பட்டு கடந்த 12 நாட்களாக கும்பல்கும்பலாக கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்த கஜாலாவின் தந்தையையும்அடித்து உதைத்துள்ளனர்.
12 நாள் கொடுமைக்குப் பின்னர் இரு பெண்களையும் ஒரு அமைச்சரின் ஆட்கள்கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் பொங்கியெழுந்து அந்தகாரை துரத்தி நிறுத்தினர். ஆனால் காரில் இருந்த 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இருபெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002ம்ஆண்டு முத்தாரன் மய் என்ற பெண், சொத்துப் பிரச்சினை காரணமாக ஒருகிராமத்தால் கூண்டோடு கற்பழிக்கப்பட்ட கொடுமை நடந்தது. பாகிஸ்தான்உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை மீட்டது.
தற்போது படித்த குற்றத்திற்காக மகளையும், தாயையும் 12 நாட்கள் அடைத்து வைத்துகற்பழித்த மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தைபாகிஸ்தான் காவல்துறை மறுத்துள்ளது. இது கட்டுக் கதை என்று கபீர்வாலா போலீஸ்அதிகாரி கூறினார். ஆனால் இருவரும் பலரால் பலமுறை கற்பழிக்கப்பட்டதைஉள்ளூர் மருத்துவனை உறுதிப்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications