2 ஏக்கர் இலவச நிலம்: கருணாநிதி இன்று வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை முதல்வர்கருணாநிதி இன்று திருவள்ளூரில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி மற்றும் ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவசநிலம் ஆகிய முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் கலர் டிவி திட்டம்செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.தந்தை பெரியார் பிறந்த தினமான இன்று இலவச நிலம் வழங்கும் திட்டத்தை முதல்வர்கருணாநிதி தொடங்கி வக்கிறார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகவளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் இந்தத் திட்டத்தைகருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
விழாவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்குகிறார்.கிருஷ்ணசாமி எம்.பி., சிவாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
இன்றைய விழாவின்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 139 கிராமங்களைச்சேர்ந்த 1036 பேருக்கு தலா 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications