ஓடும் விமானத்தில் இன்னொரு கட்டிப்புடி!
சென்னை:
சென்னை விமானத்தில் பயணம் செய்த இளைஞர், விமான பணிப்பெண்ணை கட்டிப் பிடித்து சில்மிஷம் செய்ததுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில், பயணித்த முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் லட்சுமிகோபகுமாரிடம், பாலியல் சில்மிஷம் செய்ததாக சமீபத்தில் கேரள அமைச்சர் ஜோசப் சர்ச்சையில் சிக்கினார்.இதுதொடர்பாக நடந்த விசாரணையைத் தொடர்ந்து ஜோசப் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.இந்த சர்ச்சை தற்போது தான் அடங்கியுள்ள நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் சென்னை விமானத்தில்நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. மொத்தம் 152 பயணிகள் அதில் இருந்தனர்.சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வரும் அபிஷேக் என்ற வாலிபரும் பயணிகளில் ஒருவர்.
டெல்லியில் பணியாற்றி வருகிறார் அபிஷேக். விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது, அபிஷேக்,விமான பணிப்பெண் ஒருவரை கட்டிப் பிடித்துள்ளார். அவருக்கு முத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அந்த பணிப்பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் இதைப் பார்த்து அதிர்ந்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு, அபிஷேக்கிடமிருந்து அந்த பணிப்பெண்ணை மீட்டனர்.
சில பயணிகள் அபிஷேக்தை விமானத்திலேயே அடித்து உதைத்தனர். விமானம் சென்னைக்கு வந்ததும்,அபிஷேக்கை விமான நிலைய மேலாளர் சுப்பையாவிடம் பயணிகள் ஒப்படைத்தனர். அவரை போலீஸில்ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அபிஷேக், தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்சஆரம்பித்தார். இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகள், விமான பணியாளர்கள் ஆகியோரிடம்பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அபிஷேக். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications