ரவுடிகளைப் பிடிக்க தியேட்டரில் துப்பாக்கிச் சூடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி தியேட்டர் வாசலில் 3 ரவுடிகளைபோலீஸார் துப்பாக்கி சூடு நடத்திப் பிடித்ததால் ரசிகர்கள் பதறியடித்து ஓடினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூணாம்பேடு கிராமத்தைச்சேர்ந்தவர் செந்தில். பெரிய ரவுடியாம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் செந்தில் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக செந்திலை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் யார்கண்ணிலும் சிக்காமல் செந்தில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில்,செந்தில் தனது கூட்டாளிகளோடு சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக காஞ்சிபுரம்போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து 15 போலீஸார் கொண்ட தனிப்படை 3 ஜீப்களில் சென்னைக்குவிரைந்தது. போலீஸாருக்கு வரும் வழியில் இன்னொரு தகவலும் கிடைத்தது.செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் சென்னை ஜாபர்கான் பேட்டை காசிதியேட்டரில் வேட்டையாடு விளையாடு படம் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தத்தகவல் தெரிவித்தது.

இதையடுத்து நேராக காசி தியேட்டருக்கு போலீஸார் விரைந்தனர். ஜீப்களைமறைவிடத்தில் நிறுத்தி விட்டு அப்பகுதியில் போலீஸார் பதுங்கி நின்றனர்.

மாலை 6 மணிக்கு படம் முடிந்து ரசிகர்கள் வெளியேற ஆரம்பித்தனர். அப்போதுசெந்திலும், அவரது கூட்டாளிகள் இருவரும் தியேட்டை விட்டு வெளியே வந்தனர்.அவர்களைப் பார்த்த போலீஸார் உஷாராயினர்.

3 பேரும் தாங்கள் வந்த டாடா இண்டிகா காரை நெருங்கி அதனுள் ஏறி காரைகிளப்பிக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென போலீஸார் காரை மறித்துதுப்பாக்கிளுடன் 3 பேரையும் சுற்றி வளைத்தனர்.

இதை எதிர்பாராத செந்திலும், கூட்டாளிகளும் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடஎத்தனித்தனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் ஓடாதீர்கள், ஓடினால்சுட்டு வீழ்த்தி விடுவோம் என எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதைப் பார்த்தஇன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி ஒரு முறைசுட்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் பயந்து சிதறி ஓடினர்.

போலீஸார் எதற்கும் தயாராக வந்திருப்பதை உணர்ந்த செந்திலும், கூட்டாளிகளும்ஓடாமல் கையை தூக்கியபடி நின்று விட்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்தபோலீஸார் அவர்களை ஜீப்பில் ஏற்றினர்.

பின்னர் உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உதவி ஆணையர் சுதாகர்விரைந்து வந்து தியேட்டர் வாசலில் துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து காஞ்சிபுரம்போலீஸாரிடம் விசாரணை நடத்தினார்.

தாங்கள் வந்த நோக்கம், 3 பேரையும் பிடிக்க எடுத்த முயற்சிகள், துப்பாக்கி சூடுநடத்தியதற்கான அவசியம் ஆகியவை குறித்து எழுத்துப் பூர்வமாக காஞ்சிபுரம்போலீஸார், சென்னை போலீஸாரிடம் விளக்கமாக தெரிவித்தனர். பின்னர் பிடித்த 3ரவுடிகளுடனும் காஞ்சிபுரம் விரைந்தனர்.

தியேட்டருக்கு உள்ளே கமல்ஹாசனின் போலீஸ் வேடத்தை ரசித்து விட்டு வெளியேவந்த ரசிகர்களுக்கு, நிஜப் போலீஸாருக்கும், ரவுடிகளுக்கும் இடையிலான இந்த என்கவுண்டர் பெரும் பீதியை கொடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+