அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு நிவாரணம்
சென்னை:
வீரப்பன் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு நிவாரணம்வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த காலத்தில் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்இணைந்து வீரப்பன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தால் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சதாசிவாகமிஷன் பரிந்துரை அறிக்கை, தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னால் உள்ளது.
இந்த நிலையில் நீதிபதி சதாசிவா கமிஷனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்புக்கு ஏற்பஇடைக்கால நிவாரணம் அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி, ராமர் அணையைச் சேர்ந்த மாறன் மகன் மாதா என்பவர் சட்டவிரோதமாகஅடைத்து வைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளானமைக்காக ரூ. 1லட்சம் வழங்கப்படும்.
கோடம்பள்ளி சித்தப்பாவின் மகன் கரியான் என்பவர் எந்த வேலையிலும் ஈடுபட முடியாத அளவுக்குமுடமாக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவருக்கு ரூ. 2 லட்சம்.
லக்கம்பட்டி மணி என்பவர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு அதன் காரணமாக மரணமடைந்தார். அவரதுதுணைவியாருக்கு ரூ. 2லட்சம்.
கோட்டயூர் கந்தசாமி கவுண்டரின் மகன் கருப்பண்ணனும் தாக்கப்பட்டு மரணம் அடந்ைதார். அவரதுகுடும்பத்துக்கு ரூ. 2லட்சம்.
தேவாரமலை தொட்டா தம்பி என்பவரின் மகன் கிருஷ்ணன் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவரதுகுடும்பத்துக்கு ரூ. 2லட்சம்.பர்கூர் தம்புராட்டியைச் சேர்ந்த சின்னையன் மகன் மாதேவன் என்பவர் சட்டவிரோதமாக அடைத்துகொடுமைப்படுத்தப்பட்டார். அவருக்கு ரூ. 1 லட்சம்.
அதே சின்னையனின் மகன் கரியான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்.அவருக்கு ரூ. 1லட்சம்.
மேட்டுப்பாளையம் ஆறுமுகத்தின் மனைவி சின்னப்பொண்ணு சட்டவிரோதமாக பிடித்து அடைக்கப்பட்டதோடு,அவரது கணவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதால் ரூ. 2 லட்சம் நிவாரணம்.
திருப்பூர் சேகரனின் மனைவி செல்வி என்பவர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு, பாலியல் கொடுமைக்குஆளானார். அவரது கணவர் மரணம் அடைந்ததால் ரூ. 2லட்சம்.
தேவர்மலையைச் சேர்ந்த கேளடி என்பவரை 2 மாதங்கள் அடைத்து வருத்தியதற்காக ரூ. 1 லட்சம்.
லக்கம்பட்டியைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் மரணம் அடைந்ததற்காக அவரது மனைவி சாந்திக்கு ரூ. 2லட்சம்.
பெரிய தண்டாவைச் சேர்ந்த ராஜா மரணம் அடைந்ததற்காக அவரது மனைவி பாப்பம்மாவிற்கு ரூ. 2லட்சம்வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications