மதுரை-அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தத் தொகுதியின் எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மறைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 11ம் தேதிஇடைத் தேர்தல் நடக்கிறது. நேற்று முன் தினம் இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இத் தொகுதியில் திமுக சார்பில் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜக்கையன், ராஜன் செல்லப்பா மேலும் சசிகலா ஆகியோரதுபெயர்கள் அடிபட்டன.
இந் நிலையில் ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதற்கிடையே அதிமுக பொருளாளர் டிடிவி தினகரன், மாஜி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,செங்கோட்டையன் உள்ள மூத்த நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
![]() |
திமுக சார்பில் ருக்மணி தவிர, மதுரை துணை மேயர் கவுஸ் பாட்சாவின் பெயரும் அடிபடுகிறது.
தேமுதிக சார்பில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, பொருளாளரான டைரக்டர் சுந்தர்ராஜன் ஆகியோரில்ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தத் தொகுதியில் தான் விஜய்காந்தின் பெற்றோரின் வீடு உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் இத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜன் 12,000 வாக்குகள் பெற்றதுநினைவுகூறத்தக்கது.
கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:
மொத்த ஓட்டுக்கள்- 1,34,913
பதிவானவை- 94,226
பிடிஆர் பழனிவேல்ராஜன் (திமுக)-43,185
ஜக்கையன் (அதிமுக)- 35,992
சுந்தர்ராஜன் (தேமுதிக)- 12,038
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்தத் தொகுதியில் பிரச்சாரம் களை கட்டப் போகிறது.முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சர்களும் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவும் தீவிரபிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.
அதிமுகவுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் ஆகியோரும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
ராஜன் செல்லப்பா மனு தாக்கல்:
இந் நிலையில் மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜன் செல்லப்பா இன்றுகாலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஏராளமா அதிமுகவினர் புடை சூழ தேர்தல் அதிகாரி மூக்கையாவிடம் தனது வேட்பு மனுவை அவர்வழங்கினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications