தமிழக பாஜக தலைவராகிறார் இல.கணேசன்?
சென்னை:
தமிழக பாஜக தலைவராக இல.கணேசனை நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
கடந்த ஒரு மாதமாக தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. கிளை, ஒன்றியங்கள்,மாவட்ட தலைவர்கள் அளவில் நடக்கும் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து பாஜகவின் புதியமாநிலத் தலைவரை தேர்வு செய்யவதற்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல்21ம் தேதி நடைபெறவுள்ளது.இந்தப் பதவிக்கு இப்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, திருநாவுக்கரசர்ஆகியோர் போட்டியிடப் போவதாகக் கூறப்பட்டது.
தமிழக பாஜக விவகாரங்களை கவனிக்கும் உயர் மட்ட குழுவில் பண்டாரு தத்தாத்ரேயா, ராதாகிருஷ்ணன்,சுகுமாரன் நம்பியார், பொன் ராதாகிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், எச்.ராஜா, மோகன்ராஜூலு, திருநாவுக்கரசர்,வைத்திலிங்கம், வேலாயுதம் உள்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவும், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி அமைப்புகளின் ஆதரவும்இருப்பதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உள்ளது. ஆனால் திருநாவுக்கரசர், எச்.ராஜா ஆகியோரும் இந்தப்பதவியை குறி வைத்துள்ளனர்.
இதனால் போட்டி இல்லாமல் ஒருமனதாக தலைவரை தேர்வு செய்ய கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டவர்களின் ஆதரவு இல. கணேசனுக்கு இருப்பதால் அவரையே தமிழக பாஜகதலைவராக்க இரு தலைவர்களும் விரும்புகின்றனர். இப்போது இல.கணேசன் அகில இந்திய துணை பொதுச்செயலாளராக இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications