மாவோயிஸ்ட் தலைவர் விடுதலை: மீண்டும் கைது!
சென்னை:
நேபாள நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கஜ்ரோல் 3 ஆண்டுகளுக்குப்பின்னர் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவரைமேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர்.
நேபாள நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்ற அமைப்புநேபாளத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.இந்தியாவிலும் மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இந்தஅமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் பொலிட்பீரோ குழு உறுப்பினரான சந்திர பிரகாஷ் கஜ்ரோல், கடந்த
2003ம் ஆண்டுஆகஸ்ட் 20ம் தேதி சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் விமானம் மூலம் செல்லவிருந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய சிறையில்அடைத்தனர். அதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கஜ்ரோல். போலிபாஸ்போர்ட் வழக்கில்அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் 1 வருட சிறைதண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு தண்டனைகளும் இன்று முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை கஜ்ரோல் சிறையிலிருந்துவிடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெளியே வந்ததும், தயாராக இருந்த மேற்கு வங்க போலீஸார் கஜ்ரோலைகைதுசெய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கஜ்ரோல் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக கஜ்ரோலை அம்மாநிலபோலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கஜ்ரோல் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கஜ்ரோல் மீண்டும் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதராவளர்கள் கோர்ட் வளாகத்தில்ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோர்ட்டின் அனுமதியை பெற்ற பின்னர் கஜ்ரோலை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்ல போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications