காந்தஹார் விமானக் கடத்தல்: அல் கொய்தாதான் காரணம்!
இஸ்லாமாபாத்:
இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் நகரான காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டசம்பவத்தின் பின்னணியில் அல்கொய்தா அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு 178 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளகாந்தஹாருக்கு கடத்திச் செல்லப்பட்டது. அப்போது அங்கு தாலிபான்களின் ஆட்சி நடந்து வந்தது. தாலிபான்தீவிரவாதிகள்தான் இந்தக் கடத்தலுக்குக் காரணம் என அப்போது கூறப்பட்டது. ஆனால் அல்கொய்தாதீவிரவாதிகள்தான் இந்தியன் ஏர்லைன்ஸை கடத்தினர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஓசாமா பின்லேடனின் முன்னாள் மெய்க்காவலரான அபு ஜிண்டால்என்பவர் இந்தத் தகவலை அல்ஜஸீரா டிவியில் தெரிவித்துள்ளார்.
விமானங்களைக் கடத்தி நியூயார்க் இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டனில் மோதிய செயலுக்குமுன்னோட்டமாக இந்திய விமானத்தை கடத்தியுள்ளனர் அல் கொய்தா அமைப்பினர். அவர்கள் நடத்திய முதல்பெரிய விமானக் கடத்தல் இதுதான்.
இந்தக் கடத்தலின் போது தீவிரவாதிகள் கோரிய மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கார், அகமது உமர் சயீத்ஷேக் ஆகிய முக்கிய தீவிரவாதிகளை இந்திய அரசு விடுவித்தது. அதன் பிறகே விமான பயணிகளைவிடுவித்தனர் அல்கொய்தா தீவிரவாதிகள். இந்த சம்பவத்தில் ஒரு பயணி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிப்ான் அரசு இந்திய அரசுடன் நட்புறவில் இல்லாததால், கடத்தப்பட்டவிமானத்தை காந்தஹாருக்கு கொண்டு வருமாறு பின்லேடன் உத்தரவிட்டுள்ளார். இந்த விமானத்தை மீட்கஇந்திய அரசு போர் விமானங்களை அனுப்பினால் அவற்றை தகர்க்க ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்புஏவுகணைகளையும் அல்கொய்தாவினர் தயார் நிலையில் வைத்திருந்தனராம்.
3 முக்கிய தீவிரவாதிகளை இந்திய அரசு விடுதலை செய்ததும் அவர்கள் பின்லேடனை சந்தித்துள்ளனர்.அப்போது மசூத் அசாரை பின்லேடன் பாசத்துடன் வரவேற்றாராம். 3 பேரின் விடுதலையைக் கொண்டாட பெரியஅளவிலான விருந்துக்கும் லேடன் ஏற்பாடு செய்தாராம்.
இதேபோல, 1998ம் ஆண்டு யுஎஸ்எஸ் கோல் என்ற அமெரிக்க போர்க் கப்பலை தகர்க்க லேடன் திட்டமிட்டார்.ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து அக்கப்பல் ஏமன் நாட்டில் இருந்தபோது அதை தாக்கினர். ஆனால்அதில் ஓரளவு சேதம் மட்டுமே ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் அமெரிக்காவுக்கும், ஏமனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. அல்கொய்தாஅமைப்பினரைத் தட்டிக் கேட்கவும் முடியாமல், அமெரிக்காவை சமாளிக்கவும் முடியாமல் ஏமன்தர்மசங்கடத்தில் ஆழ்ந்ததாம்.
தன்னால் முஸ்லீம் நாடு ஒன்றுக்கு பிரச்சினை வரக் கூடாது என்பதால் இந்த சம்பவத்திற்காக ஏமனிடம்தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தாராம் லேடன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications