2 கோடி பரிசு- ஜெவுக்கு குற்றப் பத்திரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடிக்கான டி.டிக்களை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்ட வழக்கில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளன்று பரிசாக ரூ. 2 கோடிக்கு89 டி.டிக்கள் அவருக்கு வந்தன. இவற்றை அரசின் கணக்கில் சேர்க்காமல் தனது கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் அது கோரியது.இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த இந்த வழக்கில்கடந்த ஜூலை மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இனி வரும் வாய்தாக்களில் அவர்நேரில் ஆஜராகத் தேவையில்லை என நீதிபதி விலக்கு அளித்தார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர், ஜெயலலிதா சார்பில்குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஏற்கனவேஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications