இலங்கையில் காலூன்றும் சீனா, பாக்-நெடுமாறன்
பழனி:
இலங்கையில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் காலூன்றி வருகின்றன. எதிர்காலத்தில் இந்த நாடுகளால்தமிழகத்திற்குத்தான் பெரும் ஆபத்து உள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்எச்சரித்துள்ளார்.
பழனியில் பற்றி எரியும் தமீழழமும், பதறித் துடிக்கும் தமிழகமும் என்ற தலைப்பில் பழ. நெடுமாறன் பேசினார்.அப்போது, லெபனான்-இஸ்ரேல் போருக்கு குரல் கொடுக்கும் இந்தியா, இலங்கையில் தமிழன் கொன்றுகுவிக்கப்படுவது குறித்து எந்தக் குரலும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.இலங்கைத் தமிழனுக்காக இந்திய அரசு எந்த ஆதரவையும் தெரிவிக்காமல் உள்ளது. உடனடியாக மத்தியஅரசிடம் தமிழனின் நிலை குறித்து தெரியப்படுத்தி அவனைக் காப்பாற்ற கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் அவரது பெயர் வரலாற்றில் பதியப்படும்.
முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் வேறு நாடுகள் ராணுவத் தளம் அமைத்தால் அதுஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும். அதற்கு இந்தியா சரியான பதிலடியைத் தரும் என்றார்.
இன்று இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.இலங்கையில் காலூன்று முயற்சிக்கின்றன. அப்படி ஒன்று நேர்ந்தால், போர்க்காலத்தில், இந்தியாவில் தமிழகம்தான் முதல் அடியை வாங்க நேரிடும். இதை அனைத்துத் தமிழர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே இலங்கை விஷயத்தில் இந்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றார் நெடுமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications