அரசியலுக்கு வரும் கிழட்டு நடிகர்கள்-ராமதாஸ்
தஞ்சாவூர்:
சினிமாவில் ஓய்வு பெறும் வயதை எட்டியதும் அரசியலுக்குப் புகுந்து விடுகிறார்கள் என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், சிலநடிகர்கள், சினிமாவில் ஓய்வு வயதை எட்டியதும், அரசியலுக்குள் வந்து விடுகிறார்கள்.சினிமாவில் நடக்கும் அட்டூழியங்களை நான் சுட்டிக் காட்டிப் பேசினால் என்னை விமர்சிக்கிறார்கள். மக்களைநான் கெடுப்பதாக என் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் அவர்களைப் பார்த்து தான் நாடே கெட்டுப்போய்க் கிடக்கிறது.
இப்போது பாமகவினர் மக்களுக்கு உருப்படியான செய்தித் தாள் ஒன்றையும், தொலைக்காட்சி ஒன்றையும் நடத்திவருகிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தக் கெடுதலும் வராது. அவை இரண்டுமே மக்களுக்கானவை.
ஜெயலலிதாவுக்கு தலைவராக இருக்கும் தகுதியோ, அதற்கான திறமையோ கிஞ்சித்தும் கிடையாது. நர்வாகத்திறமையும் அறவே கிடையாது. தலைமைத்துவப் பண்பை, திறமையை வளர்த்துக் கொள்ள நாட்டிலேயேபாமகவில் மட்டுமே உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. வேறு எந்தக் கட்சியிலும் இப்படிப்பட்ட அரசியல் பயிற்சிகிடையாது.
மக்களுக்கு இப்போதைய அரசியல் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் நிறைய விழிப்புணர்வு உள்ளது.எனவே பாமகவினர் மக்கள் பிரச்சினைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். எங்கெல்லாம் மக்கள்பிரச்சினையில் இருக்கிறார்களோ அங்கு ஓடிச் சென்று உதவ வேண்டும்.
பாமக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வருகிற 24ம் தேதி நடைபெறும். முதல் மாநாடு இது என்பதால் அலைகடலென இளைஞர்கள் திரண்டு வர வேண்டும். இதே போல 1 லட்சம் மகளிரை திரட்டி மாபெரும் மாநாடுபூம்புகாரில் நடைபெறும் என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications