ராக்கெட் லாஞ்சர்: 7 பேருக்கு போலீஸ் காவல்
பெங்களூர்:
ராக்கெட் லாஞ்சர் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள 7 பேரை 5 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து அம்பத்தூர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் ஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்காக லாரி மூலம்கடத்தப்பட்டபோது அவை ஆந்திர போலீஸாரிடம் சிக்கின.சீனிவாசரெட்டி என்பவர்தான் இந்த ராக்கெட் லாஞ்சர்களை லாரி மூலம் ஆந்திராவுக்கு அனுப்பியது தெரியவந்தது. பின்னர் இந்த சீனிவாச ரெட்டியின் உண்மையான பெயர் ரகு என்பதும் அவரும், அவரது மனைவிசுதாராணியும் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்துக் கொடுத்த 7 நிறுவனங்களும் சிக்கின. இதுதொடர்பாக 7 பேரைபோலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவாஜி, அருணாச்சலம், ரமேஷ், குமார், முத்துச்சாமி, வீரபத்திரராவ், அண்ணாமலை ஆகியோரை நேற்று அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் சத்யாவிடம், 7 பேரிடமும் மேல் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களை போலீஸ்காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றமாஜிஸ்திரேட் சத்யா, 5 நாள் போலீஸ் காவலில் விடுவித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 7 பேரையும் பலத்த காவலுடன் போலீஸார் அழைத்துச் சென்றனர். சென்னை புறநகரில் ரகசியஇடத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், இவர்களின்தொழிற்சாலைகளுக்கும் அழைத்துச் சென்று ராக்கெட் லாஞ்சர்களை எப்படித் தயாரித்தனர் என்பதை நேரடியாகபார்க்கவும் உள்ளனர்.
நக்சலைட்டுகளுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது, யார் மூலம் தொடர்பு கொண்டார்கள், ஆயுதத்தயாரிப்பு தொடர்பாக எப்படி ஒப்பந்தம் செய்கிறார்கள், எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பது உள்ளிட்டஅனைத்து விவரங்களையும் இவர்களிடம் பெறவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications