மாவோ தலைவரை மே.வ கொண்டு செல்ல தடை
சென்னை:
நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திர பிரகாஷ் கஜூரோலை மேற்கு வங்கமாநிலத்திற்கு அழைத்துச் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
நேபாள நாட்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்ற கட்சியின் பொதுச்செயலாளரான சந்திர பிரகாஷ் கஜூரோல் கடந்த 2003ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்மூலம் வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாக சென்னை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த கஜூரோல் 2 நாட்களுக்கு முன்பு விடுதலைசெய்யப்பட்டார். ஆனால் சிறை வாசலிலேயே அவரை மேற்கு வங்க போலீஸார்கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
மேற்கு வங்க போலீஸாரின் செயலுக்கு கஜூரோலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். கஜூரோலை விடுவிக்க வேண்டும், மேற்கு வங்க மாநிலத்திற்குஅவரை அழைத்துச் செல்லக் கூடாது என்று கோரி கஜூரோல் சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், தமிழ்வாணன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இன்று மீண்டும்இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, கஜூரோல்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும் முன்பே மேற்கு வங்க போலீஸார்அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக் காவலில் வைத்துவிட்டனர்.
மேலும் வழக்கு விவரங்களையும் மேற்கு வங்க போலீஸார் நீதிமன்றத்தில்தெரிவிக்கவில்லை. கஜூரோலை மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், கஜூரோல் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். எனவே அவருக்குஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, கஜூரோலை மேற்குவங்கத்திற்கு அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்தனர். விசாரணைவெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.
மேலும், கஜுரோல் மீது மேற்கு வங்க போலீஸார் தொடர்ந்த வழக்கு விசாரணைநீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தின் முடிவுக்கே விடப்படுவதாகவும் நீதிபதிகள்அறிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications