செய்யாறு-300 கோடியில் காலணி தொழிற்சாலை
சென்னை:
செய்யாறில் ரூ. 300 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதிமுன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கும் தைவான் குரோத் லிங்க் நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.குரோத் லிங்க் நிறுவனம், பெங்க் டே எண்டர்பிரேசஸ் என்னும் தைவான் நாட்டு ஷூ தயாரிப்பு நிறுவத்தின்துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்கள், ஸ்கேட்டிங் ஷூக்கள், சாதாரணஷூக்கள் போன்றவற்றை தயாரிப்பதோடு புகழ்பெற்ற உலக பிராண்ட் ஷூ வகைகளையும் தயாரிக்கிறது.
பெங்க் டே நிறுவனம் சீனாவிலும், வியட்நாமிலும் நான்கு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு இந்த நிறுவனம் 770 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளது. மேலும்பல்வேறு இடங்களிலும் மொத்தம் 60,214 பணியாளர்களைக் கொண்டு இந் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந் நிலையில் குரோத் லிங்க நிறுவனம் தமிழ்நாட்டில் செய்யாறில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் 275 ஏக்கர்பரப்பளவில் காலணிகள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கவும், அம் மண்டலத்தில் காலணிகள்தயாரிப்புத் தொழிற்சாலையை அமைக்கவும் முன் வந்துள்ளது.
இத் திட்டத்தை குரோத் லிங்க் மற்றும் அதன் குரூப் நிறுவனங்கள் இணைந்து ரூ. 300 கோடி நேரடி முதலீட்டில்நிறுவ உள்ளன.
இதன் மூலம் முதற்கட்டமாக 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இத்திட்டத்தின் அனைத்துவிரிவாக்கப் பணிகளும் நிறைவுற்ற நிலையில் சுமார் 15,000 பேர் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்பணியில் அமர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications