உள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு தாக்கல் துவக்கம்
சென்னை:
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன்முடிவடைகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 13மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.13ம் தேதி முதல் கட்ட தேர்தலில் சென்னை, கோவை, சேலம், நெல்லை மாநகராட்சிகளுக்கும், 45நகராட்சிகளுக்கும், 23 மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கும், 281 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள்ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கும், 57 நகராட்சிகள், 27 மூன்றாம் நிலை நகராட்சிகள், 280 பேரூராட்சிகள்,190 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கு 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மொத்தம் 1,30,962 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலைதொடங்கியது.
புதிய உத்தரவுகள்:
இதற்கிடையில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவுகளைபிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
வேட்பு மனுவின் விலை ஒரு ரூபாய். இதை வேட்பாளர்கள் ஜெராக்ஸ் நகல் எடுத்து நிரப்பி பயன்படுத்தலாம்.ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 4 மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆனால் 4 மனுக்களையும் தனித் தனிநபர்கள் முன்மொழிய வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் பஞ்சாயத்து எல்லைக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அதுபோலமனுவை முன் மொழிபவர்களும் சம்பந்தப்பட்ட வார்டுக்குள் இருக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தங்கள் மனுவுடன் சொத்து கணக்கை காட்டும் பட்டியலை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.அதில் அசையும் சொத்து, அசையா சொத்து, நகைகள், ரொக்கம், வங்கியில் உள்ள பணம் மற்றும் கடன்விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
தொடர்பான செய்திகள் நாடாளுமன்ற, சட்டபை தேர்தலில் மட்டுமே வேட்பாளர்கள் சொத்து கணக்கை காட்டுவதுகட்டயாமாக பின்பற்றப்பட்டது. தற்போது முதன் முதலாக இந்த நடைமுறை உள்ளாட்சி தேர்தலுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெபாசிட் தொகை:
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 200
சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - ரூ. 600
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் - ரூ. 1,000
பேரூராட்சி, 3ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 500
மாநகராட்சி உறுப்பினர் - ரூ. 2,000
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய வேட்பாளர்கள், இந்த தொகையில் பாதியை கட்டினால் போதும்.
தேர்தல் பணியை பார்வையிட மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் மொத்தம் 30 அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றார் சந்திரசேகரன்.
தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: 20.9.2006
மனு தாக்கலுக்கு கடைசி நாள்: 27.9.2006
மனுக்கள் பரிசீலனை: 28.9.2006
மனுவை திரும்பப் பெற கடைசி நாள்: 30.9.2006
வாக்குப் பதிவு: 13.10.2006, 15.10.2006
வாக்கு எண்ணிக்கை: 18.10.2006
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: 25.10.2006
மேயர் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்: 28.10.2006


Click it and Unblock the Notifications
