2 ஏக்கர் நிலம் எல்லோருக்கும் கிடையாது
சென்னை:
தமிழகத்தில் உள்ள அத்தனை ஏழை விவசாயிகளுக்கும் 2 ஏக்கர் நிலம் இலவசமாகதர முடியாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதி கூறியுள்ளார்.
சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் நேற்று மாலைதலைமைச் செயலாளர் திரிபாதியும், 38 துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும்பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.இந்த மெகா பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு துறைகளின் திட்டங்கள்,செயல்பாடுகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
அப்போது 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் குறித்து பெரும்பாலானபத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அதற்கு விளக்கம் அளித்து வருவாய்த்துறைசெயலாளர் ஆதிசேஷய்யா பேசினார். அவர் கூறுகையில்,
அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் 1,91,320 ஏக்கர் உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ளஅரசு தரிசு நிலம் 69,217 ஏக்கர். இதுதவிர சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ளபட்டா நிலம் 6,84,411 ஏக்கர் ஆகும்.
ஆக மொத்தம் 9 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் திரிபாதி, தமிழகத்தில் 20 லட்சம்ஏழை விவசாயத் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள்அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்குவது சாத்தியமல்ல.
அதற்குப் பதிலாக அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் பயன் கிடைக்கும்வகையில், இவர்களில் பெரும்பாலானோருக்கு நிலம் கிடைக்கும் வகையில் 2 ஏக்கர்என்பதற்குப் பதில் 1 ஏக்கர் நிலம் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச நிலம் கொடுப்பதில்முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் அவர்களும் விவசாயப் பணிகளில்ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும்.
இலவச கலர் டிவி திட்டத்தைப் பொறுத்தவரை டிவிகளே இல்லாத ஏழைக்குடும்பத்தினருக்கு மட்டுமே இலவசமாக டிவி வழங்கப்படும். முதல் கட்டமாக30,000 டிவிகள் வழங்கப்பட்டது. இதில் ஏற்கனவே டிவிகள் உள்ளவர்களுக்கும் டிவிவழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த தவறு எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். அடுத்த ஆண்டுமார்ச் மாதத்திற்குள் 25 லட்சம் டிவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பு நக்சலைட்பிரச்சினை இருந்தது. தற்போது அது இல்லை. இந்த மாவட்டங்களில் தமிழககாவல்துறை முழு விழிப்புணர்வுடன் இருந்து வருகிறது. மாநிலத்தின் எந்தப்பகுதியிலும் நக்சலைட் தொல்லையோ, தீவிரவாத செயல்களோ இல்லை.
நக்சலைட் நடமாட்டம் இருக்கலாம் என கருதப்படும் பகுதிகளில் வீரப்பனைப் பிடிக்கஉருவாக்கப்பட்ட அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் ராக்கெட் லாஞ்சர் தயாரிக்கும் பணி திடீரென தொடங்கியதில்லை.கடந்த 2003ம் ஆண்டு முதலே இங்கு ஆயுதம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது என்றார் திரிபாதி.
தொழில் துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் மொத்தம் 5 வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ. 2,235 கோடியாகும்.
இவற்றின் மூலம் நேரடியாக 24,000 பேருக்கும், மறைமுகமாக 26,000 பேருக்கும்வேலை கிடைக்கும் என்றார்.
நலத் துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில்,
சிக்குன்குனியா மேலும் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நலனைக்கருத்தில் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்திரமெளலி பேசுகையில், மாநிலத்தில் உள்ள12,618 கிராமப் பஞ்சாயத்துக்களையும் ஆன்லைன் மூலம் இணைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இந்த பஞ்சாயத்துக்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
அதன் மூலம் அந்தந்த கிராமப் பஞ்சாயத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள்,பதிவுகள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு சர்வர்களில் பராமரிக்கப்படும்என்றார்.
நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் பேசுகையில், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.12,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நலிவுற்ற பிரிவினரின் மேம்பாட்டுக்காக ரூ.11,292 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பற்றோர், முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவி உள்ளிட்டதிட்டங்கள் மூலம் 12 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். குடிநீர், சாலை வசதிஉள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 6,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்ஞானதேசிகன்.
இந்த மெகா பத்திரிக்கையாளர் சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட நிருபர்களும்,புகைப்படக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications