காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் தர அரசு எதிர்ப்பு
சென்னை:
முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசின்வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அரசினர் தோட்டம், எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் உள்ள 2ஹோட்டல்களை மிகக் குறைந்த வாடகைக்குத் தந்து அரசுக்கு பல லட்சம் ரூபாய்அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார் காளிமுத்து.இது தொடர்பாக காளிமுத்து மீது மட்டும் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி காளிமுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி நாகப்பன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது.
அப்போது காளிமுத்து சார்பில் ஆஜரான அதிமுக வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில்,
காளிமுத்து உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். எனவேவிசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு தருவார். எனவே அவருக்கு முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் கடும் எதிர்ப்புதெரிவித்தார். அவர் கூறுகையில், காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் அளித்தால் அதுவிசாரணையை பாதிக்கும். எனவே முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகப்பன், விசாரணையைவியாழக்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications