அமைதி திரும்புமா? ஏக்கத்தில் இலங்கை வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

காங்கேசன்துரை:

விடுதலைப் புலிகளின் முற்றுகையால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவித்து வரும் இலங்கைவீரர்கள், எப்போது குடும்பத்தினரைப் பார்ப்போம், ஊர் திரும்புவோம் என்ற ஏக்கத்திலும், விரக்தியிலும் தவித்துவருகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படைகளுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு தவிடுபொடியானது. இரு தரப்பும் கடுமையாக மோதி வந்தது. சிலநாட்களாக இந்த சண்டை சற்று மட்டுப்பட்டது.

தற்போது மீண்டும் இரு தரப்பினரும் தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடரும் இந்த சண்டையால் அதிக விரக்திஅடைந்துள்ளனராம் இலங்கை வீரர்கள். யாழ் தீபகற்பத்தில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீண்டகாலமாக இங்கே தங்கியுள்ளதால் அவர்களுக்கு குடும்ப ஏக்கம் வந்து விட்டது.

அதுவும் கடந்த பல வாரங்களாக யாழ்ப்பாணம் நாட்டின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டதால் உள்ளேசிக்கியுள்ள வீரர்கள் எங்கும் போகவும் முடியாமலும், தொலைபேசி வசதி இல்லாததால் குடும்பத்தினருடன்போனில பேசவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

யாழ் தீபகற்பகப் பகுதியில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் நிலை கொண்டுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள்,எப்போது குடும்பத்தைப் பார்ப்போம், ஊர் போய்ச் சேர்வோம் என்ற விரக்தி நிலையில் உள்ளனராம்.

ஹெராத் ராஜரத்னே என்ற வீரர் கூறுகையில், இங்கே உள்ள சர்ச்சுகள், கோவில்கள் இடிந்து போய்க் கிடக்கின்றன.வயல் வெளிகள் பொட்டல் காடுகளாக மாறியுள்ளன. புல்லும், களையும் முளைத்துப் புதர் போல கிடக்கிறது.வீடுகளை விட்டு விட்டு ஓடிய தமிழர்களில் வீட்டில் தான் ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் வீட்டுதோட்டத்தில் தான் பதுங்கு குழிகளை தோண்டியுள்ளோம்.

எங்களுக்கு உணவு சமைப்பதற்காக கைதிகளை அழைத்து வந்துள்ளனர். எப்போது அமைதி திரும்பும் என்றுஏக்கமாக உள்ளது. விடுதலைப் புலிகள் எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் போது நாங்களும் திருப்பித் தாக்கவேண்டியது அவசியமாகிறது.

அமைதி திரும்பும் வரை ராணுவத்தில் இருக்க விரும்புகிறேன். அதன் பின்னர் எனது குடும்பத்திற்கு திரும்புவேன்.எனது குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். காய்கறி, பழத் தோட்டம் அமைத்து பிசினஸ்செய்ய விரும்புகிறேன் என்கிறார் ராஜரத்னே. இவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 90களில் யாழ்பாணம் புலிகள் கையை விட்டு நிழுவிப் போனது. ஈழத் தமிழர்களின் கலாச்சாரத்தொட்டிலாக கருதப்படுவது யாழ்பாணம். இதை மீட்க விடுதலைப் புலிகள் தற்போது தீவிரமாக முயன்றுவருகின்றனர். இதன் முதல் கட்டமாக யாழ்பாணத்தை நாட்டின் பிற பகுதியிலிருந்து துண்டித்துள்ளனர்.

தற்போது ராணுவத்தை பின் வாங்கச் செய்யும் வகையில் புலிகள் தரப்பு கடும் நெருக்கடியை கொடுக்கஆரம்பித்துள்ளது. இப்போதைக்கு போர் மட்டுப்பட்டுள்ளது போல தோன்றினாலும் அவ்வளவு சீக்கிரம் போர்ஓய்ந்து விடாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்என்கிறார்கள் அவர்கள்.

கடும் சண்டை காரணமாக யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள்அங்கிருந்து வெளியேறி விட்டனர். தொடரும் துப்பாக்கிச் சத்தம், போதிய உணவில்லாமை, கடத்தல், கொலைகள்அதிகரிப்பு என அவர்களது நிம்மதியே பறி போய் விட்டது.

பசியதிங்கா வாமதேவ குருக்கள் என்ற மாணவி கூறுகையில், இங்கே நாங்கள் வசிக்க முடியாது. நாங்களும்சாதாரண மனிதர்கள் தான். இங்கே மனிதர்கள் வசிக்கக் கூடிய நிலை இல்லை என்றார். இவர் படகு மூலம்யாழ்பாணத்திலிருந்து மீட்டு வரப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவரைப் போல மேலும் 800 பேர்இந்த முகாமில் தங்கியுள்ளனர்.

பசியதிங்கா கூறுகையில், எங்களது எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை. எனது குடும்பம் இந்தப்போரினால் எல்லாவற்றையும் இழந்து விட்டது. எனது படிப்புக் காலத்தில் 3 ஆண்டுகளை நான் வீணடித்துவிட்டேன் என்கிறார் கவலையுடன்.

புலிகள் முகாம்கள் மீது தாக்குதல்:

இதற்கிடையே, மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது ராணுவம் விமான தாக்குதலைநடத்தியுள்ளது. ராக்கெட்டுகளையும் கொண்டு புலிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடந்தது. பீரங்கித் தாக்குதலும்நடத்தப்பட்டது.விடுதலைப் புலிகள் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள்ஆணைய கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் பேசிய படுகொலைகள் தடுப்புஅமைப்பின் பிரதிநிதியான பிலிப் ஆல்ஸ்டன் பேசுகையில், ராணுவம், புலிகள் இடையே மீண்டும் மோதல்கள்மூண்டுள்ளன. இலங்கையில் மனித மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்களை கொல்வதும்,அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் 700 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம்முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு படுகொலைகள் தொடருவதை தடுத்து நிறுத்த சர்வதேசகண்காணிப்புக் குழுவை அனுப்ப வேண்டும் என்றார் ஆல்ஸ்டன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+