சேலம் சட்ட கல்லூரியில் மாணவர்கள் வன்முறை
சேலம்:
சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சென்ட்ரல் சட்டக் கல்லூரி மாணவர்கள்பெரும் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரியை அடித்து நொறுக்கினர்.
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாகக் கூறிஅக்கல்லூரி மாணவ, மாணவியர் கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.இந்த கட்டணத்தை ஒப்புக் கொண்டு தான் இவர்கள் படிக்கச் சேர்ந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு சட்டக் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்பட்டதால்இங்கும் குறைக்க வேண்டும் என்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் குவிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டஇந்த மாணவர்கள் பிரச்சனை சட்டசபையிலும் எதிரொலித்தது.
போராட்டத்தை சில சக்திகள் தூண்டி விடுவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டினார்.
சென்ட்ரல் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்க தடை கோரி மாணவர்கள் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதை விசாரித்தஉயர்நீதிமன்றம் கூடுதல் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும்.மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று வகுப்புகளுக்குத் திரும்பவும்அறிவுறுத்தியது.
இருப்பினும் சென்னையிலிருந்து சேலம் சென்ற மாணவர்கள் அங்கு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டம்வன்முறையாக மாறியது.
கல்லூரிக்குள் புகுந்த மாணவர்கள், கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தினர். நாற்காலி, பெஞ்சுகளை அடித்துநொறுக்கினர். இதனால் கல்லூரியே போர்க்களம் போல காணப்பட்டது.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கமிஷனர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் விரைந்து வந்த போலீஸார் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராடும் முடிவிலேயே இருப்பதால் கல்லூரிக்குகாலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள்கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்குதலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு முன்னிலையில் உயர்நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு இடைக்கால உத்தரவை பெஞ்ச் பிறப்பித்தது. அதன்படி, கல்விக்கட்டணத்தில் 50 சதவீதத்தை மாணவர்கள் தற்போது செலுத்த வேண்டும். அப்படிசெலுத்திய மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் உடனடியாக வகுப்புக்குத் திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications