கட்டிங் ஆசிரியர்- மொட்டை மாணவர்கள்
காஞ்சிபுரம்:
பள்ளி வாசலில் சீப்பு, கத்திரிக்கோலுடன் நின்று கொண்டு அதிகமாக முடி வளர்த்திருந்த மாணவர்களுக்கு முடிவெட்டிவிட்ட தலைமை ஆசிரியரைக் கண்டித்து காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் மொட்டை அடித்துக் கொண்டுஆர்ப்பாட்டம் செய்தனர்.காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அசோகன் என்பவர் சமீபத்தில்பொறுப்பேற்றார். மாணவர்கள் ஸ்டைலாக முடி வளர்க்க கூடாது. நெற்றியில் முடி விழாத வகையில் முடியைஒட்ட வெட்டி வர வேண்டும் என்று கூறிவந்தார். ஆனால், சில மாணவர்கள் வழக்கம் போலவே பரட்டையாகவந்தனர்.
இதனால் அவர்களை அசோகன் கண்டித்தார். ஆனால், அவர் வழக்கம் போல திட்டுவதாக எண்ணி சிலமாணவர்கள் பரட்டையாக வந்தனர். ஆனால், பள்ளியின் வாசலில் கத்திரியும், சீப்புமாக நின்று மாணவர்களுக்குஷாக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.
![]() |
முடியை ஒழுங்காக வெட்டி வராத மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி அவரே வெட்டிவிட்டார். ஒன்றல்லஇரண்டல்ல 80 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரே முடி வெட்விட்டார். இந்த விவகாரம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரைகுறையாக முடி வெட்டிய நிலையில் தங்கள் பிள்ளைகள் வீடு திருப்பியதைப் பார்த்த பெற்றோர்கள்அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்ல வேண்டியது தானே. அவராகமுடி வெட்டியது தப்பு என்று சத்தம் போட்டுவிட்டு சென்றனர். அப்போது பள்ளியில் அசோகன் இல்லாததால்அவர்களை மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
![]() |
இந் நிலையில் தலைமை ஆசிரியரின் செயலை கண்டிக்கும் வகையில் சில மாணவர்கள் மொட்டையடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை கண்டித்து கோஷம் போட்டனர். அவரை கிண்டல் செய்யும்வகையில் இங்கு மாணவர்களுக்கு இலவசமாக முத்திருத்தம் செய்யப்படும் இப்படிக்கு தலைமை ஆசிரியர்.பச்சையப்பன் பள்ளி, காஞ்சிபுரம் என்று பலகையில் எழுதி ஒட்டியதோடு அருகே கத்திரிக்கோல், கத்தி, சீப்புஆகியவற்றையும் வைத்தனர்.
இதனால் அந்தப் பள்ளியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications