இழுத்தடிக்கிறார் ஜெ-வருமான வரித்துறை புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 1993-1994ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல்செய்யவில்லை. இதையடுத்து வருமான வரித்துறை 1997ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்தவழக்கு சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியில் நீதிமன்றத்தில் விசாராணையில் உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கின் விசாரணை நீதிபதி ஜெ.வி.ராஜூ முன் விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி, ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதுவாதிட வேண்டியுள்ளது. அதற்கு அவகாசம் தேவை. எனவே வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் ராமசாமி ஆஜராகி, இந்த வழக்கை வேண்டுமென்றே ஜெயலலிதாதரப்பினர் இழுத்தடிக்கிறார்கள். வழக்கில் சாட்சியளிக்க வேண்டியவர்கள், சாட்சி சொல்ல தயாராக உள்ளனர்.சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் பலமுறை மனுத் தாக்கல் செய்தும் பயனில்லை.

எனவே வழக்கை குறைந்த நாட்களுக்கு மட்டுமே தள்ளி வைத்து சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+