ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மரணம்???
பாரிஸ்:
அல்-கொய்தா இயக்கத் தலைவன் ஒசமா பின் லேடன் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில்மரணமடைந்துவிட்டதாக பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக லஎஸ்ட் ரிபப்ளிகன் என்றபிரஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
![]() |
செளதி அரேபிய உளவுப் பிரிவிடம் இருந்து இந்தத் தகவல் பிரான்சுக்கு கிடைத்ததாக அந்த பத்திரிக்கைகூறுகிறது.
கடந்த மாதமே ஒசாமா இறந்துவிட்டதாகவும் இது குறித்து செளதி அரேபிய கொடுத்த தகவலை பிரஞ்சு உளவுப்பிரிவு அறிக்கையாக தயாரித்து பிரான்ஸ் அதிபர் சிராக், பிரதமர் டி வில்லிபின், உள்துறை, பாதுகாப்புஅமைச்சர்களிடம் சமர்பித்தாக லஎஸ்ட் ரிபப்ளிகன் கூறுகிறது.
உளவுப் பிரிவின் அந்த அறிக்கையையும் லஎஸ்ட் ரிபப்ளிகன் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சில உறுதியான தகவல்களின் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டதாக செளதி உளவுப் பிரிவுக்குசெய்தி கிடைத்துள்ளது.
பாகிஸ்தானில் தங்கியிருந்த ஒசமாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான டைபாய்ட் காய்ச்சல்ஏற்ப்டடதாகவும் 23ம் தேதி நிலைமை மிகவும் மோசமாகி அவரது உடல் உறுப்புகள் செயல்பாடு இழந்ததாகவும்அதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிகிறது.
செளதி அரேபியாவுக்கு இந்த தகவல் இம் மாதம் 4ம் தேதி கிடைத்தது. ஆனால், அதை மேலும்உறுதிப்படுத்துவதற்காக அதிகமான தகவல்களை திரட்டும் பணியில் செளதி ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அந்த பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிராக் மற்றும் டி வில்லிபின் ஆகியோரின் அலுவலகங்களை செய்தி நிறுவனங்கள் தொடர்புகொண்டபோது உடனடியாக பதில் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ஒசாமா எங்கிருக்கிறார்என்றும் தெரியாது, அவரது மரணம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
இதற்கிடையே அதிபருக்கும் பிரதமருக்கும் மூத்த 2 அமைச்சர்களுக்கும் மட்டுமே தெரிந்த உளவுப் பிரிவின்அறிக்கை எப்படி லஎஸ்ட் ரிபப்ளிகன் பத்திரிக்கைக்கு லீக் ஆனது என்பது குறித்து விசாரணைக்கு பிரான்ஸ்பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் உளவுத்துறை இப்படி ஒரு அறிக்கையை தந்தது உறுதியாகிவிட்டது.
அதே நேரத்தில் ஒசாமாவின் மரணம் குறித்த செய்தி உண்மையானதா என்று இப்போதைக்கு ஏதும் கூற முடியாதுஎன்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications