பன்னீர்செல்வத்தின் பயோடேட்டா-சொத்து விவரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

விஜய்காந்தின் தேமுதிகவின் சார்பில் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பன்னீர்செல்வம்யாதவர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள ரணசிங்கபுரம். 45 வயதான இவர் மதுரைதியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றவர்.

இப்போது அண்ணா நகரில் வசித்து வருகிறார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி அமுதா. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவர் யாதவர் இனத்தைச் சேர்ந்தவர்.

தனது வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:

வங்கியில் ரொக்கம், டெபாசிட் ஏதும் கிடையாது. டாடா சஃபாரி கார் ஒன்று உள்ளது. மனைவி அமுதாவிடம் ரூ.4 லட்ச மதிப்பில் 50 சவரன் தங்க நகைகள் உள்ளன. மனைவி பெயரில் இரண்டு ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

தன் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின் நிருபர்களிடம் பேசிய பன்னீர், சட்டமன்றத் தேர்தலுக்கு பின் விஜயகாந்துக்குதமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாகதேமுதிகவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இடைத் தேர்தலில் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+