இஸ்லாமிய நாட்டு தூதர்களை சந்திக்கும் போப்
ரோம்:
இஸ்லாம் மதத்துக்கு எதிராக போப் தெரிவித்த கருத்துக்களால் உலகம் முழுவதும்போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் வாடிகனில் உள்ள இஸ்லாமிய நாடுகளைச்சேர்ந்த தூதர்களை போப் சந்திக்கிறார்.
வரும் திங்கள்கிழமை இச் சந்திப்புக்கு போப் அழைப்பு விடுத்துள்ளார்.கத்தோலிக்கர்களின் மத குருவான போப் 16ம் பெனடிக்ட் சமீபத்தில் தனது சொந்தநாடான ஜெர்மனியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,வன்முறையின் மூலமாகவே இஸ்லாம் வளர்ந்தது என்ற மன்னர் ஒருவரின் கருத்தைமேற்கோள் காட்டிப் பேசினார்.
இதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக போப் விளக்கம்தந்தார்.
மேலும் தனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம்தெரிவிப்பதாகவும் கூறினார். இதனால் ஓரளவுக்கு எதிர்ப்பு தணிந்துள்ளது.
இருப்பினும் இஸ்லாமிய நாடுகளிலும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பலபகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில், வாடிகன் நகருடன் தூதரக உறவு வைத்துள்ள இஸ்லாமிய நாடுகளின்தூதர்களை போப் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ரோம் நகருக்கு அருகே காஸ்டல் கண்டோல்பா என்ற இடத்தில் உள்ள தனதுகோடைகால ஓய்வு மாளிகையில் வரும் திங்கள்கிழமை இந்தத் தூதர்களைசந்திக்கிறார்.
அப்போது சர்ச்சைக்குள்ளான தனது கருத்து குறித்து போப் விளக்கம் தருவார் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications