பாகிஸ்தானை யு.எஸ். மிரட்டியது தெரியாது-புஷ்
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரு நாட்டுபிரச்சனை. இதில் அமெரிக்கா தலையிடாது என்று கூறி பாகிஸ்தான் அதிபர்முஷாரபுக்கு மூக்குடைப்பு தந்தார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
வாஷிங்டன் வந்துள்ள முஷாரப், புஷ்ஷை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காதலையிட வேண்டும் என்று கோரினார். ஆனால், இக் கோரிக்கையை புஷ்நிராகரித்துவிட்டார். இதை இரு நாடுகளும் தான் பேசித் தீர்க்க வேண்டும் என்றுகூறிவிட்டார்.மேலும் பின் லேடன் விவகாரத்தால் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ளமோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தானுக்குள்அமெரிக்கப் படைகள் நுழையும் என்று புஷ் கூறியதற்கு முஷாரப் எதிர்ப்புதெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்துபுஷ்ஷிடம் முஷாரப் விளக்கினார். தனது பதவிக்கு ஆபத்து வருவது மட்டுமின்றிபாகிஸ்தானே பழமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என்றார்.
இதை புஷ் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் ஒசாமாவைப் பிடிக்கபாகிஸ்தான் மேலும் அதிகமான தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்றுமுஷாரப்பிடம் புஷ் தெரிவித்தார்.
ஒசாமா குறித்த பாகிஸ்தானின் ராணுவ, உளவு அமைப்புகளின் தகவல்களைஅமெரிக்காவுடன் ஒளிவுமறைவின்றி முழுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்என்றும் புஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில் காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்றமுஷாரபின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் புஷ்.
இச் சந்திப்புக்கு பின் புஷ்-முஷாரப் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டிஅளித்தனர். புஷ் கூறுகையில், இந்திய பிரதமர் மன்மோகனும், பாகிஸ்தான் அதிபர்முஷாரப்பும் ஹவானாவில் நடத்திய பேச்சுவார்த்தை நல்ல அறிகுறிகளைகாட்டுகின்றன.
அமைதி முயற்சிகளை இரு நாடுகளும் தொடர ஆர்வமாக உள்ளன. காஷ்மீர்விவகாரத்தை இருதரப்பு ஒத்துழைப்பு மூலமாகவே தீர்க்க முடியும்.
இப்பிரச்னையை தீர்க்க இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்து விட்டால் தீர்த்துவிடலாம்.
இதற்கு வேண்டிய ஆதரவை அமெரிக்கா அளிக்கும். ஆனால், இந்தியா-பாகிஸ்தான்இடையிலான எந்த ஒப்பந்தத்துக்காகவும் நாங்கள் நிர்பந்தம் செய்ய மாட்டோம்.
இதுவரை நடந்ததையெல்லாம் பின் தள்ளி விட்டு இந்தியாவும், பாகிஸ்தானும்அமைதி முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும். காஷ்மீர் பிரச்னையில் தீர்வுகிடைக்க முதலில் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும்.
இந்தியாவைப் போல பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளஅமெரிக்கா தயாராக இல்லை என்றார்.
மிரட்டியது தெரியாது:
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவோடு பாகிஸ்தான் முழுமாைக ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானை குண்டு வீசி அழித்துவிடுவோம்என முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் பாகிஸ்தானை மிரட்டியது எனக்குத் தெரியாது என்று புஷ் கூறினார்.இந்த விஷயத்தை நான் நேற்று பத்திரிக்கைகளைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன் என்றார்.
முன்னதாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு முஷாரப் அளித்த பேட்டியில், எனது நாட்டு உளவுப் பிரிவுத் தலைவரை தொடர்பு கொண்ட ஆர்மிடேஜ், பாகிஸ்தானைகற்காலத்துக்கு அனுப்பப் போகிறோம். குண்டு வீச்சை சந்திக்க தயாராக இருங்கள் என்று மிரட்டியதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புஷ் முன்னிலையில் முஷாரபிடம் நிருபர்கள் கேட்டபோது, நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications