மதுரை: தேமுதிக வேட்பாளர் பன்னீர்செல்வம்
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிக சார்பில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
![]() |
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் கட்சியின் பொருளாளர் சுந்தர்ராஜன் போட்டியிட்டு சுமார்12,000 வாக்குகளை அள்ளினார். இதனால் தான் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் திமுகவின் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வெல்ல நேர்ந்தது.
இத் தொகுதியில் தான் விஜய்காந்தின் பூர்வீக வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்காந்தின்மனைவி பிரேமலதாவே களமிறங்கக் கூடும் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் வழக்கறிஞர் பன்னீர்செல்வத்தை நேற்று கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் தேர்வு செய்தார்.இதையடுத்து உடனடியாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக வேட்பாளரும், கட்சியின் பொருளாளர் சுந்தர்ராஜன், முன்னாள் எம்.பி. ஆஸ்டின், மதுரை மாவட்டதேமுதிக தலைவர் ராஜா, நகரச் செயலாளர் ராமர் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஏராளமான கார்களில்மத்திய தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆனால், அவர்களது வாகனங்களை தேர்தல் அலுவலக நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பையும் மீறி தேர்தல் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.தேர்தல் அதிகாரி மூக்கையாவிடம் பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவுடன் வேட்பாளரின் ஓட்டு இடம்பெற்றுள்ள திருப்புத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் சான்றைபன்னீர் தரவில்லை. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனைக்குள் அந்த சான்றிதழை கொடுக்க வேண்டும் எனதேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
பன்னீரை வேட்பாளராக தேர்வு செய்ய விஜய்காந்த் மதுரையில் தான் தங்கியிருந்தார். வேட்புமனுதாக்கலின்போது அவரும் வருவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வரவில்லை.
இன்று கடைசி நாள்:
இதற்கிடையே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்றே (சனிக்கிழமை) கடைசிநாளாகும்.
இத் தொகுதியில் வரும் அக்டோபர் 11ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications