கார்த்திக் கட்சி, புதிய தமிழகம் தனித்து போட்டி
மதுரை:
உள்ளாட்சி தேர்தலில் கார்த்திக்கின் பார்வார்டு பிளாக் கட்சியும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்கட்சியும் தனித்து போட்டியிகின்றன.
இதுகுறித்து பார்வர்ட் பிளாக்மாநில துணைத்தலைவர் முத்தையா பசும்பொன் கூறுகையில்,எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது ஆகியவைகுறித்தும் கார்த்திக் கருத்துக்களை கேட்டறிந்தார்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும்,இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு தருவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில், மதுரை உள்ளபட தென் மாவட்டங்கள் முழுவதும் தனித்து போட்டியிடவும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதன் மூலம் முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் பகுதியில் மட்டும் போட்டியிடவும் பிற இடங்களில்போட்டியிடுவதில்லை என்றும் கார்த்திக் முடிவுக்கு வந்துள்ளார்.
புதிய தமிழகம்:
அதே போல உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்தே போட்டியிடும் என அக் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் கொடுக்காமல் செப்டம்பர் 19ம் தேதி இரவில் தேர்தல் தேதியைஅறிவித்து, மறுநாளே வேட்பு மனு தாக்கல் துவங்குவதாக அறிவித்தது சரியல்ல.
முன்பிருந்த நடைமுறையின்படி ஊராட்சி ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயரை மக்களேநேரடியாக தேர்வு செய்ய வேண்டும். புதிய முறையின் கீழ் கவுன்சிலர்கள் அவர்களை தேர்வு செய்வதாகஇருப்பது ஊழலுக்கு தான் வழி வகுக்கும். உள்ளாட்சி தேர்தலின் அடிப்படை நோக்கத்தையே அது தகர்த்துவிடும்.
வழக்குகளில் சிக்கியவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால் தீண்டாமை ஒழிப்புவழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகதகவல்கள் வருகிறது. இது வருத்தமளிக்கிறது. என்றார்.
பாஜக-ஜனதா கூட்டணி:
அதே போல உள்ளாட்சித் தேர்தலில் ஜனதா கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து அனைத்துஇடங்களிலும் போட்டியிடும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் மூன்றாவது அணியை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இலவச நிலம், வீட்டுமனை பட்டா கொடுப்பதாக கூறி, திமுக அரசு மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவோம் என்றார்சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications