கருணாநிதிக்கு பாராட்டு விழா-அசத்திய ஸ்னேகா
சென்னை:
திரைப்படங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே தணிக்கை சான்றிதழ் வழங்கஅதிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
திரையுலகத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்காக திரையுலகம் சார்பில்கருணாநிதிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.மகாராஷ்டிரா கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கினார்.
இதில் ரஜினி, கமல், இளையராஜா, விக்ரம், விஜய், ஆசின், திரிஷா, ஸ்னேகா, சதா,சரோஜாதேவி, குஷ்பு, ராதிகா, தயாரிப்பாளர்கள் கேயார், அன்பாலயா பிரபாகரன்,ஏ.வி.எம்.சரவணன், காஜாமைதீன், இயக்குனர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், ஷங்கர்,கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டனர்.
நடிகர், நடிகைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் நாடகங்கள் நடைபெற்றன.
![]() |
| கருணாநிதிக்கு நினைவுப் பரிசு வழங்கும் கலைத்துறையினர் |
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சியும் அதைத் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ்கோரியோகிராப் செய்த உடல் ஊனமுற்றோர் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பாக்யராஜ் கதை, வசனத்தில் விவேக் நடித்த விடியல் என்றநாடகம் நடந்தது. மேலும் வடிவேலு மற்றும் நடிகர்கள் இடம்பெற்ற நகைச்சுவைநாடகம் நடைபெற்றது.
இதையடுத்து "ஓ ரசிக்கும் சீமானே என்ற பழைய பாடலுக்கு நடிகை ஸ்னேகாவும்சூப்பர் நடனமாடினார். அவரைத் தொடர்ந்து சந்தியாவும் ஜீவாவும் ஆட, அடுத்துரமேஷ், கீர்த்தி சாவ்லா ஆகியோர் ரண்டக்கா பாடலுக்கு ஆடினர்.
பின்னர் பிரசன்னா, சிந்து துலானி, பிரசாந்த், பரத், ஜெயம் ரவியும், லட்சுமி ராய்,பிரகாஷ்ராஜ், சிலம்பரசன் மற்றும் நமீதா ஆகியோரும் நடனமாடினர்.
![]() |
நடிகர் எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் பாடலை பாடினார். இயக்குனர் சீமான் எழுதிய"காலத்தை வென்ற கலைஞர் நாடகத்தில் நாசர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர்நடித்தனர்.
மொத்தத்தில் ஸ்னேகாவின் ஆட்டம் தான் எல்லோரையும் மிகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
![]() |
திரையுலகத்தின் சார்பில் எனக்கு வெள்ளியில் சிம்மாசனமும், பேனாவும் கொடுத்தனர்.சிம்மாசனத்தில் நான் அமரவேண்டும் என்று ஆசை தெரிவித்தனர். எனக்குசிம்மாசனத்தில் அமர்வதைவிட உங்கள் இதயத்தில் இருக்கத்தான் ஆசை.
இதனால் தான் சிம்மாசனத்தில் உட்காரமாட்டேன் என்றேன். மாநில அரசுக்கு திரைப்படங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் கிடையாது.
![]() |
மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அந்தந்த மாநில அரசுகளால் தணிக்கைசெய்யப்பட்டால் தான் அந்த மாநில கலாாச்சாரம், பண்பாடு குறித்து தெளிவாகதெரிந்து கொண்டு சரியாக தணிக்கை செய்ய முடியும்.
இதை முன்பு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டிலேயே திமுக வலியுறுத்தியது. ஆனால்,அந்தக் கோரிக்கை இப்போது வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது என்றார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications