மதுரை இடைத் தேர்தல்: களத்தில் 20 பேர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் தேர்தலில் 20 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 20 பேர் மனுதாக்கல் செய்திருந்தாலும் அங்கு திமுக, அதிமுக,தேமுதிக ஆகியவற்றுக்கு இடையே தான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்தமாதம் 11ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் திமுக வேட்டபாளராக மதுரை முன்னாள் துணை மேயர் கவுஸ் பாட்ஷாவும், அதிமுகவேட்பாளராக மதுரை மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பாவும், தேமுதிக சார்பில் எம்ஆர். பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஆதித்தமிழர் ஜனநாயக முன்னணி தலைவர்எஸ்டி.கல்யாண சுந்தரம், அகில பாரத மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் கே.கணேசன் ஆகியோர்மனு தாக்கல் செய்தனர்.

சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனார்.

விஜய்காந்த்தின் தேமுதிக வேட்பளராக போட்டியிடும் பன்னீர் செல்வம், வேட்பு மனு தாக்கலின்போதுவாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருப்பதற்கான அத்தாட்சியை சமர்ப்பிக்கவில்லை.

மனுக்கள் பரிசீலனை நடைபெறுவதற்குள் அவர் அத்தாட்சியை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை அவர்அதை கொடுக்க தவறினால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை உருவாகலாம்.

இதனால் முன்னெச்சரிக்கையாக மதுரை செல்லூரை சேர்ந்த முஜிபூர் ரகிமான் என்பவர் தேமுதிகவின் மாற்றுவேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். பன்னீரின் மனு தள்ளுபடியானால் முஜிபூர்வேட்பாளராவார்.

வரும் 25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற வருகிற27ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி பட்டியல் வெளியாகும்.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் விவரம்:

1.கவுஸ் பாட்ஷா- திமுக

2.ராஜன் செல்லப்பா- அதிமுக

3.பன்னீர் செல்வம்- தேமுதிக

4.சந்திரசேகரன்-திமுக மாற்று வேட்பாளர்

5.கே.துரைப்பாண்டி-அதிமுக மாற்று வேட்பாளர்

6.முஜிபூர்ரகிமான்-தேமுதிக மாற்று வேட்பாளர்

7.அப்துல் கீம்- சுயேட்சை

8.பத்மராஜன்- சுயேட்சை

9.வி.எஸ்.மணி- லேபர் பாட்ர்டி

10.எம்.பிரபு- சுயேட்சை

11.ஆர்.சரவணண்-சுயேட்சை

12.பாண்டி - சுயேட்சை

13.பொன்ராமன் -சுயேட்சை

14.விஜயராஜன்- சுயேட்சை

15.ஒச்சாதேவர்- சுயேட்சை

16.முருகேசன்- சுயேட்சை

17.கணேசன் - சுயேட்சை

18.கல்யாணசுந்தரம்- சுயேட்சை

19.அன்பானந்தம்- சுயேட்சை

20.எஸ்.பால்பாண்டி -சுயேட்சை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+