முரசு சின்னம் இல்லை-திமுக மீது கேப்டன் ஆவேசம்
சென்னை:
திமுக அரசு மத்திய அரசை கைக்குள் போட்டுக் கொண்டு, சதி செய்து, உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் முரசுசின்னமே இல்லாத அளவுக்கு மோசடி செய்துள்ளது என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. எங்கள் கட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள்இணைந்து வருகிறார்கள். திமுக, அதிமுகவின் மக்கள் விரோத போக்குகளால் அக்கட்சியினரும் இணைந்துவருகின்றனர்.
தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்படுகின்றன. மாற்று அரசியலை மக்கள் விரும்புவதையேஇது காட்டுகிறது. என் கட்சியில் இணைபவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, மாஜி அமைச்சர்கள் கண்ணப்பன், இந்திர குமாரிபோன்றவர்களும் ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கியவர்கள் தானே.
அவர்கள் திமுகவில் இணைத்தால் நல்லவர்களாகி விட முடியுமா? ஆனால் கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள்தனித்து செயல்பட்டு வந்தவர்கள். கடலில் பல வகையான ஆறுகள் இணைகின்றன. ஆனாலும் கடலின் தன்மைமாறாது. அதுபோல என் கட்சியில் இணைபவர்கள் என் வழிக்கு வந்துவிடுவர்.
எம்எல்ஏவாக தேர்வான 100 நாட்களில், விருத்தாசலம் தொகுதியில் பள்ளி, மருத்துவமனை கட்டிடங்கள் கட்டநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு நிதி கிடைப்பதற்கு முன் எனது சொந்த நிதியில் ஏராளமான உதவிகளை செய்துள்ளேன். ஐந்து ஆண்டுகளில்அரசு நிதி மற்றும் என் சொந்த பணத்தைக் கொண்டு, விருத்தாசலத்தை மாநிலத்தின் மாதிரி தொகுதியாக மாற்றிகாட்டுவேன்.
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்தாக திமுகவினர்கூறுகின்றனர். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மிளகாவத்தல் ரூ.75 ஆகஉயர்ந்துள்ளது.
புளி ரூ. 36லிருந்து ரூ.42 ஆகவும், துவரம் பருப்பு ரூ. 32லிருந்து ரூ.36 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.26லிருந்துரூ.40 ஆகவும், ஏலக்காய் ரூ.300லிருந்து ரூ.500 ஆகவும், கடலைமாவு மூட்டைக்கு ரூ.2,400லிருந்து ரூ.3,800ஆகவும், கோதுமை, மைதா போன்ற பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதுதான் திமுக அரசின்சாதனையா?
இலவச டிவி, நிலம் வழங்குவதாக பறைசாற்றும் முதல்வர் கருணாநிதி, இலவசமாக கேபிள் இணைப்புகொடுப்பதாக அறிவிக்க வேண்டியது தானே. கேபிள் டிவியை அரசுடைமையாக்குவது மத்திய அரசிடம்இருப்பதாக விளக்கமளிக்கும் கருணாநிதி, மத்திய அமைச்சரவிையல் திமுக இடம் பெற்றிருப்பதை மறந்துவிட்டாரா?
மத்திய அரசை வலியுறித்தி, கேபிள் டிவிகளை அரசுவுடமையாக்கி, மக்களுக்கு இலவச சேவை கிடைக்கச் செய்யவேண்டியது தானே. உள்ளாட்சி தேர்தலில் என் பிரச்சாரம் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்துபாருங்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்டடது. ஆனால், மத்திய அரசை கைக்குள்போட்டுக் கொண்டு திமுக அரசு சதி செய்து முரசு சின்னமே இந்த உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் இல்லாதஅளவுக்கு செய்துள்ளனர்.
இதனால் நான் பின் வாங்கிவிட மாட்டேன். எனக்கு பின்னால் மக்கள் உள்ளனர் என அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications