கருணாநிதியின் கச்சத்தீவு நாடகம்: ஜெ
சென்னை:
கச்சத் தீவு பிரச்சனை குறித்து பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருப்பது வரப்போகும் உள்ளாட்சி தேர்தலைமனதில் வைத்து தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,கச்சத் தீவு அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்றுபிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி இருக்கிறார். இச்செயல் தமிழக மீனவர்களின நலனில் அக்கறைஉள்ளவர் போல் தன்னைக் காடடிக் கொள்கிற பொய்மை கலந்த செயலாகும்.
கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை 1974ல் அப்போததைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த போதுஅப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எதிர்க்கவில்லை. அப்போது தமிழர்களின் வாழ்வைப் பற்றி சிறிதும்கவலைப்படாத கருணாநிதி கச்சத்தீவு பிரச்சனை குறித்து இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதுவரப்போகும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுகின்ற ஒரு நாடகம் ஆகும்.
தமிழக மீனவர்களுக்கும், கச்சத் தீவுக்கும் தொப்புள் கொடி உறவு. அங்கு சென்றால் தான் மீன்பிடிக்க முடியும்.காரணம் அந்தப் பகுதியில் தான் மீன் அதிகமாக கிடைக்கிறது. அந்த பகுதிக்கு மீனவர்கள் சென்றாலே இலங்கைகடற்படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிடித்த மீன்களையும் அவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். கொடுமையான தாக்குதலுக்குமீனவர்கள் ஆளாகின்றனர். தொடர்ந்து இலங்கை சிறைகளிலும் அடைக்கப்படுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொருமுறையும் நாம் குரல் கொடுத்து, அவர்களை மீட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று இன்று கடிதம் எழுதுவதன் மூலம்,கருணாநிதி மீனவர்களின் பக்கம் இருப்பதாக அர்த்தமாகிவிடாது. அவ்வாறு அவர் மீனவர்களின் பக்கம்இருப்பது உண்மையானல், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நடைமுறைகளைமேற்கொள்ளாமல் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டத் தொடங்கியது ஏன்?
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications