பால் கொடுத்த தாய் கருணாநிதி: ரஜினி
சென்னை:
அழுதால் தான் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பாள். ஆனால், திரையுலகத்தினர்அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:சினிமாவைப் பற்றி, சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகம்தெரியாது. தெரியாத துறையைப் பற்றி நிறை பேர் திட்டுகிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள். சினிமா துறையில்இருப்பது எவ்வளவு சிரமானது. பிரச்சனைகளை சந்தித்து வர வேண்டும் என்பதெல்லாம் அதில்இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
இப்போ சினிமா இன்டஸ்டிரியில் திண்டாட்டம் தான் அதிகம். பத்து பேர்நல்லாயிருந்தாலும், பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தான் நடந்துவருகிறது.
நல்லாயிருப்பதாக நினைக்கும் அந்த பத்து பேரில் ஐந்து பேர் நல்லாயில்லை.நல்லாயிருப்பது போல நடிக்க வேண்டியிருக்கிறது. வட்டிக்கு காசு வாங்கி,ஒட்டியாணம் வாங்கியவர் அதற்கு வட்டி கட்ட ஒட்டியாணத்தையே விற்று கட்டவேண்டிய நிலை தான் சினிமாவில் இருக்கிறது.
![]() |
அசலை கட்ட வீட்டை விற்பார்கள். அதனால் தான் சினிமாக்காரர்கள் தூங்கும் போது கூட காலை ஆட்டியபடிதூங்க வேண்டும் என்பார்கள். இல்லையென்றால் இறந்துவிட்டான் என கூறிவிடுவார்கள்.
சங்கடப்படும் திரையுலகத்தினரை காப்பாற்ற யார் வருவார் என்றிருந்த நிலையில்,முதல்வர் கருணாநிதி நிறைய சலுகைகளை வழங்கி திரையுலகத்தினரைகாப்பாற்றியுள்ளார்.
எந்தக் குழந்தையும் அழுதால் தான் தாய் பால் கொடுப்பாள். திரையுலகத்தினர்அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி.
இந்த சலுகைகளை, கலைஞர் தந்த பரிசுகளை யாரும் தட்டிப் பறிக்க விடாதீர்கள். அவ்வாறு ஒரு சூழ்நிலைவந்தால் சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் உங்களுடன் இருப்பேன்.
பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் கூட சினிமாவினால் எல்லாத்தையும் இழந்துள்ளனர்.பிரபலமாக இருந்த மாடர்ன் தியேட்டர் என்ன ஆனது. பெரிய நடிகராக, தயாரிப்பாளராக இருந்தஅமிதாப் வீடு கூட ஒரு சமயம் ஏலம் விடும் அளவிற்கு போனது. இந்த ரஜினிஎம்மாத்திரம்.
![]() |
அரசியல்வாதிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜாதகம் மாறும். ஆனால்,சினிமா இன்டஸ்டிரியில் உள்ளவங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம்மாறும் (சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார் ரஜினி)
அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை விமர்சனம் செய்கின்றனர். ஒரு தலைவர்விமர்சனம் செய்யலாம். அவரோட வாலு விமர்சனம் செய்யலாம். வாலில் உள்ளமுடிகூட விமர்சனம் செய்வதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மக்களுக்கு நன்மை செய்யும் கருணாநிதி தனது குடும்பத்தாருடன் நலமாக வாழ வேண்டும். அப்போது தான்தமிழக மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றார் ரஜினி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications